அறிமுகம் : கோவக்காய் காடுகளிலும், வேலிகளிலும் தானாகவே வளரும் தன்மை கொண்டது. கோவைக்காய் ஒரு வெப்பமண்டல தாவரமாகும், இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள், தண்டுகள் மற்றும் காய்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கோவக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. உடல்சோர்வு : மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் : தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம்…
Browsing: Health
அறிமுகம் : மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும். மருத்துவ குணம் : செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும். நிறம் மாறும் பூக்கள் : தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின்…
அறிமுகம் : உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதாலும் அந்த நல்லெண்ணெய்யை மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும். இதயம் : இதயம் காக்கும் நல்லெண்ணெய் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் தொன்றுதொட்டு இடம்பெற்று வந்து கொண்டிருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அள்ளி தரும் இந்த நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் ஏராளமான பிரச்சனைகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம். புற்றுநோய் : நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணையில் அதிகமுள்ளது. இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் : உடல், மனம் உற்சாகமாக…
அறிமுகம் : மனிதர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது. இதை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிலக்கடலை தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனர். குடல் புற்று நோய் : புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல்…
அறிமுகம் : நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெயாகும். வயிற்று கிருமிகள் : இனிப்புகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளில் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும். புற்று நோய் : வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.…
அறிமுகம் : இளம் வயதில் இருந்தே அனைவரும் பால் குடித்து தான் வளர்ந்திருப்போம். பாலில் இருக்கும் சத்துக்கள் தான் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் வலுப்பெறுவதற்கும் உதவி வருகிறது. தாய்ப்பாலுக்கு பிறகு நாம் அனைவரும் பருகுவது விலங்குகளின் பால் தான். மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் இவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது. இவை தவிர தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால் தான் தேங்காய் பால், பாதாம் பால், பருத்திப்பால். இந்த ஒவ்வொரு பாலுமே உடலுக்கு வலிமை தரக்கூடியவை தான். வயிற்று புண் : வயிற்று புண், குடல் புண் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பருத்திப்பாலை குடிப்பது நல்லது. விரைவாக வயிற்றில் உள்ள புண்கள் அழிந்து உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பருத்திப்பால் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. முதுகு வலி : பருத்தி பாலுடன் வறுத்து அரைத்த கோதுமையை சேர்த்து காய்ச்சி குடிப்பதன் மூலம்…
அறிமுகம் : விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பழமாக கருதப்படுகிறது. விளாம்பழம் ஆங்கிலத்தில் வுட் ஆப்பிள் (wood apple) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான பழமாகும், விளாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. ஊட்டச்சத்துக்கள் : வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் விளாம்பழத்தில் அதிகம் உள்ளது.இதில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியம் : விளாம்பழம் அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதில் உள்ள பப்பைன் போன்ற என்சைம்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை போக்கும்.மர ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது குடல் இயக்கங்களை சீராக்கவும், இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவும். இதய ஆரோக்கியம் : விளாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த…
அறிமுகம் : நாவல் பழம் மரம் ஒரு அற்புதம் நிறைந்த மரமாகும். இந்த மரத்தின் இலை, பட்டை, பழம், வேர், விதை என்று அனைத்துமே மருத்துவ பயன்களை பெற்றுள்ளது. மேலும் இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.மேலும் இவற்றில் உள்ள இரும்புசத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. நீரிழிவு : நாவல் பழத்தின் விதைகள் நீரிழிவு நோயை குணப்படுத்த சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும்.பின் ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடையும். இதய தசைகள் : பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயம் போல செய்து அதனுடன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அளவோடு சாப்பிட்டால் மலட்டுத்…
அறிமுகம் : நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மஞ்சள் இருந்து வருகிறது. இது ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படக்கூடிய உணவுப்பொருள் ஆகும். நாம் தயார் செய்யும் உணவிற்கு நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டு வரவும், உடலுக்கு ஊட்டச்சத்துகளை வாரி வழங்கவும் இவை பயன்படுகிறது.மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதனால்தான் இது பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரு முக்கிய மூலிகையாகவும் மஞ்சள் உள்ளது. முகத்துக்குப் பூசும் மஞ்சள் : முகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வராமல் தடுக்கவும், முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது. எலும்பு திசு : இது எலும்பு திசுக்களை உருவாக்க மற்றும் சரிசெய்ய உதவும்…
அறிமுகம் : முன்னோர்கள் ஒவ்வொரு காலங்களிலும் கிடைக்கும் ஆரோக்கியம் தரும் உணவு பொருள்களை மொத்தமாக சேகரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். அந்த வகையில் கோடையில் மட்டுமே பூக்ககூடிய வேப்பம் பூக்களை சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்தி வந்தார்கள். வேப்பம் பூவை சேகரிக்கும் முறையும் பதப்படுத்தும் முறையும் குறித்து தெரிந்து கொள்வதோடு அவை எதற்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். வேப்பம் பூவை சேகரிக்கும் முறை : வேப்பமரத்திலிருந்து நேரடியாக பூக்களை பறித்தாலோ அல்லது தரையில் விழுந்திருக்கும் பூக்களாக இருந்தாலும் அதை உதறி ( சில பூக்களில் புழு, பூச்சி இருக்க கூடும்) சுத்தமான நீரில் கழுவி நிழலில் உலர்த்தி காயவிட வேண்டும். ‘ஈரம் போக உலர்ந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரிக்கவும். பிறகு மாதம் ஒருமுறை இலேசாக வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். வயிற்று வலி பிரச்சனைகள் : வாயு கோளாறு, வயிறு உப்புசம், வயிறு மந்தம்,…