Browsing: Health

நாட்டு சக்கரை நன்மைகள் : மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ரத்த சுத்திகரிப்பு : நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. கொழுப்பு : உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த…

Read More

கிராமப்புறங்களில், வேலி ஓரங்களில் வளரும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்தக் காட்டுப் பகுதியில் கல்யாண முருங்கை மரங்கள் நிறைய உண்டு. பெண்களுக்கு குழந்தைப்பேறு : இன்னொரு உசுரை உருவாக்குற பொம்மனாட்டிகளுக்கு இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும். இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும். குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! இந்த மரத்து இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும்.…

Read More

டீ ட்ரீ ஆயில் : அழகை அள்ளிதரும் பொருள்களில் எசென்ஷியல் ஆயில்களுக்கும் தனி பங்குண்டு. அதில் முக்கியமானது டீ ட்ரீ ஆயில் என்று சொல்லகூடிய தேயிலை எண்ணெய்.தேயிலை மற்றும் அதன் தண்டு பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் சருமப் பராமரிப்பிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கியபங்கு வகிக்கிறது. ச. கூந்தல் வளர்ச்சிக்கு : கூந்தலுக்கு போஷாக்கு தரும் எண்ணெய் இது. கூந்தலில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்றாலும் அதன் அடர்த்தியை தக்க வைத்துகொள்ளும் வகையில் எப்போதும் இதை பயன்படுத்தலாம். தலைக்கு குளிப்பதறகு முன்பு 2 டீஸ்பூன் இந்த ஆயிலை எடுத்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதியிலிருந்து கூந்தல் வரை நன்றாக தடவி பத்து நிமிடங்கள் கழித்து கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு கொண்டு குளித்தால் கூந்தலுக்கு கிடைக்க வேண்டிய இயல்பான போஷாக்கு கிடைக்கும். ஆண்கள் பெண்கள் வளரும் பதின்பருவம் அனைவரும் இதை பயன்படுத்தலாம். ​முடி உதிர்வு பிரச்சனைக்கு : கூந்தலில்…

Read More

கடலை எண்ணெய் பயன்கள் : உலகின் பெரும்பாலான உயிரினங்கள் தாவரங்களில் இருந்தே தங்களின் அன்றாட உணவை பெறுகின்றன. மனிதனும் பயிர்கள், மரங்கள், செடிகளில் இருந்தே தனது பெரும்பாலான உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கிறான். உணவுகளை சமைப்பதற்கு சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எண்ணெய் பெரும்பாலும் தாவரங்களில் இருந்தே பெறப்படுகிறது. அப்படி சத்து நிறைந்த வேர்க்கடலை பருப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய் தான் “கடலை எண்ணெய்”. கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது . இதயம் : கடலை எண்ணையில் குறைந்த அளவிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து அதிகம் இருக்கின்றன. எனவே கடலை எண்ணையை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. இந்த எண்ணையில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது. புற்று நோய் : கடலை எண்ணெய்க்கு…

Read More

நல்லெண்ணெய் நன்மைகள்: நல்லெண்ணெய் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்: உணவில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து சமைப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுவோம்..! எள் என்பது உலகில் வெப்ப மண்டலம் அதிகம் உள்ள நாடுகளில் விளைக்கப்படும் ஒரு தானிய வகை யை சேர்ந்ததாகும். எள்ளில் இருந்து எடுக்கப்படுகின்றன எண்ணெய் தான் நமக்கு உணவுகளில் சமைப்பதற்கு நல்லெண்ணெயாக கிடைக்கிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நல்லெண்ணெய்யினை சமையலில் உபயோகிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். தோல் சம்பந்த நோய்கள்: உடலில் தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது நல்லெண்ணெய். நல்லெண்ணெயில் அதிகமாக ஜிங்க் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் தோல் பகுதியில் ஜவ்வு தன்மையை நீடிக்க செய்து சாஃப்டான தோலை உருவாக்கிறது. வெயில் காலங்களில் சிலருக்கு தோல் பகுதியானது வறட்சி அடைந்தது போன்று…

Read More

தேங்காய் எண்ணெய் பயன்கள் : கடையில் விற்கும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நோய்களை குணப்படுத்த : தேங்காய் எண்ணெயில் இருக்கும் மீடியம் செயின் ட்ரை கிளிசரைட் எனும் பொருள் நேரடியாக கல்லீரலை சென்றடைகிறது. இது கல்லீரலுக்கு சென்று ketone body என்று சொல்லக்கூடிய வேதி பொருளை உருவாக்குகிறது. இந்த ketone body உடலில் உருவாகுவதால் அவை வலிப்பு நோயை சரி செய்யவும், அல்சைமர் நோய், மன நோய்களை சரி செய்யவும் உதவுகிறது. இதயத்தை பாதுகாக்க: இதயத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் LDL எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் பாதுகாத்து HDL எனும் நல்ல கொழுப்புகளை உடலில் அதிகரிக்க உதவுகிறது உடல் எடை குறைய: உடல்…

Read More

தூதுவளை ரசம் : தூதுவளை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது சளி, இருமல்நெஞ்சு சளி, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனைகள் மற்றும் பல சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்தது. அதற்கு தூதுவளையின் இலையை துவையல், சூப் மற்றும் ரசம் என்று செய்து சாப்பிடலாம். அதிலும் தூதுவளை ரசத்தை சூப்பாக கூட சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் – 1 கையளவு நெய் – 1 டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுதக்காளி – 1-2 பொடியாக நறுக்கியது டீஸ்பூன் சீரகம் – 1தூதுவளை இலைகள் – 1 கையளவு நெய் – 1 டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுதக்காளி – 1-2 பொடியாக நறுக்கியது டீஸ்பூன் சீரகம் – 1 செய்முறை : முதலில் தூதுவளை இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் புளியை ஒரு…

Read More

சாப்பிட தோன்றும் சிக்கன் பிரியாணி : சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2டம்ளர் சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சைமிளகாய் – 2 கொத்தமல்லி சிறிதளவு புதினா சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மல்லித்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பட்டை – 2 லவங்கம் – 5 ஏலக்காய் – 2 பிரியாணி இலை – 4 சீரகம் – 1 டீஸ்பூன் தயிர் – 2 சிக்கன் பிரியாணி செய்முறை: முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம்…

Read More

 அறிமுகம் :      கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்புகளை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும். சீரண சக்தி : கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது. காலரா : காலரா தண்ணீரால் பரவக் கூடிய நோயாகும். இதனால் பேதி, வாந்தி மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். கிராம்பு, பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது. கேன்சர் : கிராம்பில் உள்ள…

Read More

கீழாநெல்லி அதிசயமான கிடைக்க பெறாத மூலிகை அல்ல. இவை சாதாரணமாக வயல் வரப்புகளிலும், ஈரமான நிலப்பரப்புகளிலும் காணப்படும் சிறு தாவரம்.கீழாநெல்லி இலைகளில் இருக்கும் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இந்த இலைகளுக்கு கசப்பு சுவையைத்தருகிறது. இலைகளுக்கு கீழ் நெல்லி போன்று காய் சிறியதாக இருப்பதால் இந்த தாவரத்தை கீழா நெல்லி என்று அழைக்கிறார்கள். இதை அவ்வபோது உணவிலும் சாறாக்கியும் குடித்து ஆரோக்கியத்தை காத்தார்கள். வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப இதை அவ்வபோது பயன்படுத்தினாலும் நோய் வரும் போதும் இதை கொண்டே நிவர்த்தி செய்துகொண்டார்கள். கீழா நெல்லி : கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி ,இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும்…

Read More