அறிமுகம் :
ஒரு தாவரத்தின் காய்கள் நன்கு பழுத்து, சற்று இனிப்பு சுவையாக மாறும் போது அது பழம் ஆகிறது. பூமியின் வெப்ப மண்டலம் மற்றும் குளிர் பிரதேசம் ஆகிய இரண்டு இடங்களிலும் விளைகின்ற இலந்தை பழமும் ஒன்று.
இந்த இலந்தை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இலந்தை பழம் நன்மைகள்
உடல் உஷ்ணம் :
கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் அனைவருக்குமே உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது.
இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுத்துவார்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.
ஞாபகத்திறன் :
ஞாபக சக்தி அனைவருக்கும் இருக்கிறது என்றாலும் ஒரு சிலருக்கு அதீதமாகவும், ஒரு சிலருக்கு சற்று குறைவாக இருக்கும் நிலை இருக்கிறது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக திறன் மிகவும் முக்கியம். எனவே மாணவர்கள் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
எலும்புகள் :
நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம்.
இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
பித்தம் :
நமது உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை உண்டாகின்றன.
இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
வாந்தி, தலைசுற்றல் :
ஒரு சிலருக்கு பேருந்து மற்றும் பிற வாகனங்களில் பயணிக்கும் போதோ அல்லது மலை மீது பயணம் செய்யும் போதோ வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சமயங்களில் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
உடல் வலி :
உடல் வலி உள்ளவர்கள் இலந்தை பழங்களை சாப்பிட்டால் சீக்கிரத்திலேயே உடல் வலி மற்றும் உடற்சோர்வு நீங்க பெறுவார்கள்.
பசியின்மை :
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும்.
ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இலந்தை பழம் பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும்.
மாதவிடாய் :
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் ஒரு கடினமான காலமாக இருக்கிறது.
இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைய செய்கிறது.
இக்காலத்தில் பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த போக்கு அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.
ரத்த சுத்தி :
நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் நிறைந்துள்ளன. இது நமது ரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இலந்தை பழத்திற்கு ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்ததை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த சுத்தி ஏற்படுகிறது.
தூக்கமின்மை :
தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும்.நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு நீங்கும்.