அறிமுகம் :
‘கற்பக விருட்சம்’ என்று சொல்லப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் கொண்டது. இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

பனை மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இத்தகைய பனங்கிழங்கை நாம் சாப்பிடுவதினால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாமா..?
உடல் எடை அதிகரிக்க :-
மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் உடல் சூட்டினை குறைக்கும். எனவே உடல் உஷ்ணத்தினால் உடல் எடை குறையும் அப்படிப்பட்டவர்கள் தினமும் பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.
மலச்சிக்கல் சரியாக :-

மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்.
கர்ப்பப்பை வலுப்பெற :
பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் இந்த பனங்கிழங்கை பவுடர் செய்து தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடுவதினால் கருப்பை வலுப்பெறும்.

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ளும்.
இரத்த சோகை குணமாக :
பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது.

எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோய் குணமாக :
பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும்.
இரும்புச்சத்து :

பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மை உடையது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
வாயுத்தொல்லை நீங்க :
இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது.

எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். வாயுத்தொல்லை நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நோய்களை குணமாக்குகிறது :

பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும்.