அறிமுகம் :

நூக்கல் சற்று கடினமாக இருக்கும் காயாகும். இதனை நூல்கோல் எனவும் நூற்கோல் எனவும் சொல்வதுண்டு. நூக்களின் நன்மைகளை கீழே அறிவோம்.
ஊட்டச்சத்துக்கள் :

நூக்களில் அதிக வைட்டமின் மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளது. நூக்கலில் வைட்டமின் ஏ. சி, இ, கே,மாங்கனீசு, பீட்டாகரோட்டின் ஆகிய உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் உள்ளன.
மாரடைப்பு வராமல் தடுக்கும் :

நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.
புற்றுநோயை தடுக்கும் :

தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி :

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
நார்ச்சத்து :
நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும்.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
நுரையீரல் :

நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
செரிமானத்தைத் தூண்டும் :

நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
எலும்பு வளர்ச்சிக்கு நல்லது :

காலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் உள்ளன.