அறிமுகம் :
புடோல் அல்லது புடலை, snake gourd (தாவர வகைப்பாடு: Trichosanthes cucumerina) என்பது வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் ஒன்றாகும். இதன் காய் புடலங்காய் எனப்படுகிறது. இக் காய்கள் சுமார் 1.5 மீ நீளம் வரை வளரக் கூடியவை. பொதுவாக இவை 50 செ.மீ இருந்து 75 செ.மீ நீளமுடையவை. இந்திய, தமிழர் சமையலில் இடம் பெற்ற காய். இது குழம்பு, கூட்டு, பொறியல் என பல் வகையாக சமைக்கக் கூடியது.
Trichosanthes cucumerina
உயிரியல் வகைப்பாடு
திணை : தாவரம்
பிரிவு : பூக்கும் தாவரம்
வகுப்பு : Magnoliopsida
வரிசை : Cucurbitales
குடும்பம் : வெள்ளரிக் குடும்பம்
பேரினம் : Trichosanthes
இனம் : T. cucumerina
புடலை விளைச்சல் :

தெற்காசியா, தென்கிழக்காசியா நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் விளைச்சல் குறைவாக இருக்கும் காலங்களில், சிவந்த புடலங்காய், தக்காளிக்கு மாற்றாகவும், சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
வாழிடங்கள் :

இதன் தாயகத்தைக் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஏனெனில், Trichosanthes cucumerina என்ற தாவரயினமானது, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பாக்கித்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தென்சீனா, (குவாங்ஷி, யுன்னான்). ஆகிய நாடுகளின் காடுகளில், அதனதன் நாட்டு இனமாக கண்டறியப்பட்டுள்ளது. வட ஆத்திரேலியாவிலும் இது, அந்நிலத்தின் நாட்டு இனமாகக் கருதப்படுகிறது. புளோரிடாவிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியப் பெருங்கடல், பசிபிக் தீவுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இயல்பாக வளருகின்றன.
வகைகள் :



புடலங்காயில் பல வகைகள் உண்டு. பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு. ஆனால் காய்கறீகளில் புடலையை அடிக்கடி சேர்த்துகொள்வதில்லை. ஏனெனில் இப்போது நவீன உணவுகளுக்கு பிறகு புடலங்காயை மறந்துவிட்டோம் என்பதை மறுக்க முடியாது.
என்ன இருக்கு புடலங்காயில் :
புடலங்காயின் விதைக்குள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள், கொழுப்புச்சத்து போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. புடலங்காய் முற்றீயிருந்தாலும் இளசாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்தலாம். புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் செய்யும்.
மலச்சிக்கல் :
உணவு முறையால் தான் மலச்சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியவை. அத்தகை உணவு வகையில் புடலங்காய் சேர்த்து சமைத்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளும்.
புடலங்காய் ஜூஸ் :

நார்ச்சத்து நிறைந்த புடலங்காய் நீர்ச்சத்தும் கொண்டிருக்க கூடியவை என்பதால் இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றுகிறது. புடலங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துவருபவர்கள் நிச்சயம் மலச்சிக்கலை சந்திக்கமாட்டார்கள். மலச்சிக்கல் இருக்கும் போது புடலங்காய் சாறை இரண்டு டீஸ்பூன் அளவு குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதை உணரலாம்.
எடை குறைய :

எடை குறையும் போது அதிக கலோரிகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று எடுத்துகொள்ளும் உணவு உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைத்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும். அந்த செயலை சிறப்பாக செய்யும் புடலங்காய்.
எடை இழப்பில் உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் நிறைவாக தருவதோடு குறைந்த கலோரி கொண்டிருப்பதால் எடை இழப்பும் சாத்தியமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வாரத்துக்கு 3 நாட்கள் புடலங்காய் பச்சடி அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.
ரத்த சுத்திகரிப்பு :

ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றீனாலே பாதி நோய் அண்டாமல் தடுத்துவிடலாம். புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. புடலங்காயில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் இருக்கும் அதிக உப்பு, ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாகவும் வெளியேற்ற செய்கிறது.
சிறுநீரக சுத்திகரிப்பு :

பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரகத்தை வெளியேற்ற கூடியவை. உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரகம் வழியாக கழிவோடு வெளியேற வேண்டும். கழிவுகள் தேங்கும் போது அதிகப்படியான ஆசிட் சிறுநீரகத்தில் கற்களாக மாறுகிறது.
புடலங்காய் சிறுநீரகங்களுக்குள் திரவங்கள் சுரக்கப்படுவதை அதிகரிக்க செய்வதொடு அதை உடனடியாக உள் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற தூண்டுகிறது. உள் உறுப்புகள் சரியான நீரேற்றத்தொடு இருக்க செய்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் பணிகளை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
புடலங்காய் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்று சொல்லலாம். நீர்ச்சத்து மிகுந்த காய் காய்ச்சலுக்கான குளுமையை அதிகரித்துவிடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் புடலங்காய் வைட்டமின் சத்துக்களை மொத்தமாக கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் மற்றும் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
இதயத்துக்கு நன்மை :
பெரும்பாலான உணவுகள் நம் அருகிலேயே நம் ஆரோக்கியம் காக்க உதவுகிறது. குறைந்த விலையில் உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை காப்பவற்றில் புடலங்காயும் ஒன்று. உடல் கொழுப்புகள் கரைவதால் இதய பாதிப்பு நேராமல் தடுக்கப்படுகிறது. தமனி கோளாறுகள், ரத்த நாளங்கள் போன்ற குறைபாட்டையும் சீர் செய்கிறது. இதய பாதிப்பு கோளாறுகள் அபாயத்தை குறைக்கிறது.
மஞ்சள் காமாலைக்கு அருமருந்து :
உங்களுக்கு பித்தப்பை கோளாறு இருந்தால் நீங்கள் கல்லீரலை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும். கல்லீரல் உடலில் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு என்பதோடு ஏதேனும் குறைபாடு ஆனாலும் தன்னைத்தானே சரி செய்து கொள்ள கூடியதும் கூட. மஞ்சள் காமாலையால் கல்லீரல் பாதிப்பு உண்டாவது உண்டு.
கீழாநெல்லி போன்று மஞ்சள் காமாலை வரும் போது புடலங்காய் இலை, புடலங்காயும் மருந்தாகிறது. புடலங்காய் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் :
புடலங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற காய். சர்க்கரை நோயாளிகள் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவு மற்றும் மருந்துகள் மட்டுமே இதற்கு திர்வு என்னும் போது உணவு முறையில் அடிக்கடி புடலங்காய் சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
தூக்கமின்மைக்கு தீர்வு :
மன அழுத்தம், மன பதட்டம் என்று தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் உணவின் மூலம் பிரச்சனையை கையாள நினைத்தால் புடலங்காய் சேர்க்கலாம். புடலங்காயில் வைட்டமின் பி6 அல்லது பைரிடாக்சின் அடக்கம் உண்டு. இது மூளையின் செயல்பாடுகளை கவனித்து நரம்புதூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது. இதனால் கடுமையான தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் புடலங்காய் சாறு எடுத்துகொள்ளும் போது நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கி தூக்கத்தை ஊக்குவிக்கிறது.