அறிமுகம் :
பூண்டினை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது.
பூண்டினால் ஏற்படும் சரும, ஆரோக்கிய, கூந்தல் நன்மைகள், பயன்கள் பற்றி படித்தறிந்து பயன்படுத்துங்கள்.
பூண்டின் நன்மைகள்
அடங்கியுள்ள சத்துக்கள் :
பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.பூண்டினில் செலினியம் எனும் தாதுச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.
உடல் எடை குறைதல் :
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும்; ஏனெனில், உடல் எடை அதிகரிப்பின் ஆணி வேர் காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்தெறிய பூண்டு உதவுகிறது.
இது கெட்ட கொழுப்புகள் மற்றும் அடிபோஜெனிக் திசுக்கள் உடலில் உருவாவதை தடுத்து, தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தம் :
உடலின் இரத்த அழுத்த அளவை 10 mmHg (சிஸ்டோலிக் அழுத்தம்) இதிலிருந்து 8 mmHg (டயஸ்டாலிக் அழுத்தம்) ஆக குறைக்க, ஒரு முதிர்ந்த பூண்டில் இருக்கும் பயோ-ஆக்டிவ் சல்ஃபர் மற்றும் S-அல்லில்சிஸ்டெய்ன் போன்ற பொருட்கள் உதவுகின்றன.
உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது சல்ஃபர் ஆகும் மற்றும் ஆர்கானிக் சல்ஃபரை உடலுக்கு அளிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவை ஒரு கட்டுக்குள் வைக்கலாம். சூடு சிகிச்சையை மேற்கொண்டால், அல்லிசின் அழிந்துவிட வாய்ப்புண்டு.
நீரிழிவு / சர்க்கரை நோய் :
உடலின் வளர்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் தான் நீரிழிவு நோயாகும்; இது ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகும்.
நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவர் அல்லது சர்க்கரை நோயாளி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து, இன்சுலின் அளவை அதிகரிக்க பூண்டினை சாப்பிடலாம்.
இருமல் மற்றும் சளி :
வெள்ளைப்பூண்டில் இருக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் பண்புகள், உடலில் ஏற்படும் இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களை நொடியில் குணப்படுத்தி விடும் தன்மை கொண்டவை.
பூண்டினை பயன்படுத்தி, அதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டு இந்த இருமல், சளி பிரச்சனைகளை எளிதில் விரட்டிவிடலாம்.
கொலஸ்ட்ரால் :
அமெரிக்கன் அறிவியலாளர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் கொண்ட மனிதர்களை பூண்டினை உட்கொள்ள வைத்து நடத்திய சோதனையில், ஹைப்பர் கொலஸ்டெரொலெமிக் அளவினில், LDL கொலஸ்ட்ரால் 10% குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதயம் :
ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைப்பூண்டு எல்லாவித இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது என்பதற்கான எல்லா சான்றுகளையும் கொண்டுள்ளார்.
பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், கொழுப்பு, ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து – ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது.
அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் குறைபாட்டிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாக வெள்ளைப்பூண்டு விளங்குகிறது.
ஆர்த்ரிடிஸ் :
வயது அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, உடல் எலும்புகள் பலவீனமடையலாம்; அதாவது, எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குறைபாடுகள் இளம் வயதிலேயே ஏற்படலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் ஆகிய நோய்க்குறைபாடுகளுக்கு எதிராக போராடும் தன்மை பூண்டில் நிறைந்துள்ளது.
அறிஞர்கள் நடத்திய சோதனையில், எலும்பை அழிக்கக்கூடிய என்சைம்களின் செயல்பாட்டை குறைத்து, எலும்பை சேதத்திலிருந்து காக்க டைஅல்லைல் டைசல்ஃபைடு உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
கர்ப்பம் :
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெள்ளைப்பூண்டினை உட்கொள்வதால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருக்கும், மேலும் அபயகரமான நோய்களை தடுக்க உதவும்.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டினை உண்பதால் பல நன்மைகள் விளையும்; ஆனால், அளவு அதிகமானால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகையால் உரிய மருத்துவ ஆலோசனைக்கு பின் உட்கொள்வது நலம் பயக்கும்.
நோயெதிர்ப்பு அமைப்பு :
பூண்டினில் காணப்படும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள், இயற்கையில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் ஆகும்; இவை உடலில் ஏற்படும் விஷத்தன்மையை போக்கி, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், உடல் நோய்தொற்றுக்கு உள்ளாவதை அல்லது DNA பிறழ்வுகள் மற்றும் தொந்தரவுக்குள்ளான செல் செயல்பாடுகள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.
பூண்டினை உட்கொள்வது, உடலில் வெவ்வேறு வகைப்பட்ட நோயெதிர்ப்பு செல்களை அதிகரிக்க உதவும் .
கல்லீரல் :
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தால், அது கல்லீரலை பலவீனமாக்கி விடலாம்; மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை போக்க பூண்டு பயன்படுகிறது.
கல்லீரல் அழற்சியை சரி செய்ய S-அல்லைல்கேப்டோசிஸ்டெய்ன் (SAMC) உதவுவதாகவும், பூண்டு எண்ணெயின் ஆன்டி ஆக்சிடேட்டிவ் பண்புகள் மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு குறைபாட்டை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
புற்றுநோய் :
பூண்டில் உள்ள டைஅல்லைல் டைசல்ஃபைடு, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கவும், பூண்டிலிருக்கும் செலினியம் புற்றுநோய்க்கு எதிராக போராடவும், டிஎன்ஏ பிறழ்ச்சி மற்றும் கட்டுக்கடங்காத செல் பெருக்கம், மெட்டாஸ்டாஸிஸை தடுக்கவும் உதவுகின்றன.
புற்றுநோயை தடுக்க விரும்பும் நபர்கள், தங்களது உணவு முறையில் பூண்டினை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பூஞ்சை நோய்த்தொற்று :
நம்மில் சில நபர்களுக்கு நீண்ட நேரம் தண்ணீர் உள்ள இடத்தில் இருந்தால், கால் மற்றும் பாதங்களில் பூஞ்சைத்தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இத்தகைய ஒவ்வாமை உள்ளவர்கள் தங்களது உணவு முறைகளில் பூண்டினை சேர்த்து கொண்டால், அது ஒவ்வாமையை போக்க உதவும்.
சிறுநீரக நோய்த்தொற்று :
சிறுநீரக சுவர்களில் பிரிவை ஏற்படுத்தி, UTI பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் சூடோமோனாஸ் எரூஜினோசா எனும் நோய்க்கிருமியை தடுத்து, குறைபாட்டினை குணப்படுத்தும் தன்மை பூண்டில் உள்ளது என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இ-கோலை பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கவும் பூண்டு உதவுகிறது.
இரைப்பை அழற்சி :
வயிற்றில் சீரற்ற செரிமான அமைப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கெடுக்கும் அம்சங்களாகும்; ஆகையால், குடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், பூண்டினை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
குடல் பகுதியில் நல்ல மற்றும் தீய பாக்டீரியாக்களின் வேறுபாட்டை அறிந்து, எண்டிரோ பாக்டீரியா போன்ற தீமை விளைவிக்கும் கிருமிகளை அழிக்க பூண்டு உதவுகிறது .
இரத்த சர்க்கரை :
உயர் இரத்த சர்க்கரை தான், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற மேலும் பல நோய்கள் ஏற்பட அடிப்படை காரணம் ஆகும்.
உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கண்டிப்பாக பூண்டினை தங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
குவைத் அறிவியலாளர்கள் வேகவைத்த மற்றும் சமைக்கப்படாத பூண்டுகள் குறித்து நடத்திய சோதனையில், பச்சையான பூண்டுகள் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை குறைக்க அதிகம் உதவியதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆகையால், சமைத்த பூண்டுகளை விட பச்சையான பூண்டுகளை உண்பது, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
ஆஸ்துமா :
முற்காலத்தில் இருந்தே சளி மற்றும் ஆஸ்துமா கோளாறை குணப்படுத்த பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது; ஒரு சிறப்பான கடுகு – பூண்டு எண்ணெயை சூடுபடுத்தி, அதைக்கொண்டு மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதி போன்ற இடங்களில் மசாஜ் செய்து வருவது மார்பு சளியை போக்க உதவும்.
இப்பொழுது, ஆஸ்துமாவுடன் இணைந்து ஏற்படக்கூடிய ஹைப்பர் சென்சிட்டிவிட்டியை குணப்படுத்த பூண்டு உதவுவதாகவும், அதனுடன் கூடுதலாக சளித்தொந்தரவையும் குணப்படுத்த பூண்டு உதவுகிறது என்றும் அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காது வலி :
பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள், காது மற்றும் காது சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்றை போக்க உதவும் என்று கூறப்படுகிறது; இதை உறுதி செய்யும் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஈஸ்ட் நோய்த்தொற்று :
ஈஸ்ட் தொற்று என்பது அதிக மனஅழுத்தம் மற்றும் தர்ம சங்கடத்தை உண்டாக்கக்கூடிய ஒரு நோய்த்தொற்று ஆகும். ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த, பூண்டு ஒரு இயற்கை தீர்வாக அமைந்துள்ளது.
கேண்டிடா நோய்த்தொற்றுகளை போக்க பூண்டு உதவும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிறிதொரு ஆய்வில், ஈஸ்ட் தொற்றை போக்க பூண்டு ஒரு பயனுள்ள மருந்தாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பல் வலி :
பூண்டில் இருக்கும் அல்லிசின் ஆன்டி மைக்ரோபையல் பண்புகளை கொண்டது மற்றும் இவை பல் பிரச்சனைகள், பற்களை சுற்றி ஏற்பட்டுள்ள அழற்சி போன்றவற்றை குணப்படுத்த உதவுகின்றன.
வாயை கழுவ உதவும் மவுத் வாஷ் பொருட்கள் பூண்டிலிருந்து எடுக்கப்படுவதாகவும், அவை அதிக பயனை வழங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பூண்டு சேர்க்கப்பட்ட பற்பசை மற்றும் மவுத் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவது பல் தொடர்பான பாதிப்புகளை தடுக்க, குறைபாடுகளை போக்க உதவும்.
பூண்டின் சரும நன்மைகள் :
பூண்டு எனும் இயற்கை மூலிகை ஆரோக்கிய பயன்களை மட்டும் அல்லாமல் சில சரும நன்மைகளையும் அளிக்கிறது; அப்படி பூண்டு வழங்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இந்த பகுதியில் பார்க்கலாம்.
முகப்பரு :
பூண்டில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி மைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் விஷத்தன்மை கொண்ட பொருட்கள், முடிய குழிகள், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் போன்றவற்றால் ஏற்படும் முகப்பரு மற்றும் பருக்களை போக்க உதவுகின்றன.
சொரியாசிஸ் :
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் தன்னிச்சையான நோய் சொரியாசிஸ் ஆகும்; சிவந்த, தடித்த, எரிச்சலான, அரிப்பது போன்ற உணர்வு, உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் ஏற்படலாம். இவையே இந்நோயின் அறிகுறிகளாகும்.
பூண்டினை உண்பதால், இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது; ஆனால், நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
அழற்சியால் உண்டான சொரியாசிஸ் நோயை, அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட பூண்டினால் குறைக்க முடியும். ஆனால், இதை நிரூபிக்க எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லை.
வயதாவதை தடுத்தல் :
மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள், வருத்தம், அழற்சி, ஜீன்கள் போன்ற மேலும் பல காரணங்களால் உடல் தோற்றம் – அதிக வயதானவர் போன்று தோன்றலாம்.
வெள்ளைப்பூண்டில் உள்ள S-அல்லைல் சிஸ்டெய்ன் சருமத்தை புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாத்து, சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
பூண்டின் கூந்தல் நன்மைகள் :
வெள்ளைப்பூண்டினால் விளையும் ஆரோக்கிய மற்றும் அழகு பயன்களை பற்றி பார்த்து அறிந்தோம். இப்பொழுது பூண்டு வழங்கும் கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
முடி உதிர்வு :
இன்றைய நாளில் முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்ந்து வருகிறது; மாசுபாடு, தூய்மையற்ற நீர், தீய உணவு பழக்கங்கள், அழுத்தம் மற்றும் மேலும் பல காரணிகளால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
பூண்டு ஜெல், முடி உதிர்வை தடுத்து – கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொடுகு :
பூண்டில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பாதிப்புகளை போக்க உதவுகின்றன.
பூண்டினால் ஏற்படும் பக்க விளைவுகள் :
பூண்டு சாப்பிடுவதால், எக்கச்சக்க நன்மைகள், பயன்கள் ஏற்பட்டாலும் ஒரு சில பக்க விளைவுகள், எதிர்மறை விஷயங்கள் நிகழத்தான் செய்யும். அவ்வகையில், பூண்டினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி :
அதிக அளவு சமைக்கப்படாத பூண்டுப்பல்களை உண்டால், சில சமயங்களில் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
குடல் சார்ந்த பிரச்சனைகள் :
அதிகமான அளவு பூண்டினை உண்பது வயிற்றில் எரிச்சல் மற்றும் குடல் பகுதியில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
உடல் சூடாதல் :
அளவுக்கு மீறி பூண்டுப்பல்களை உண்பது உடலை அதிக சூடாக்கி விடும் மற்றும் இதனால் அதிக வியர்வை போக்கு ஏற்படலாம்.
மைக்ரைன் எனும் ஒற்றை தலைவலியை தூண்டிவிடும் :
பூண்டு, மைக்ரைன் எனும் ஒற்றை தலைவலியை தூண்டும் தன்மையை கொண்டது; ஆகவே, ஏற்கனவே இப்பிரச்சனையை கொண்டவர்கள் பச்சையான பூண்டினை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கண் பார்வையை பாதிக்கும் :
அளவு மீறி பூண்டினை உட்கொண்டால், அது கண் பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்; ஹைபிமா அல்லது கண்ணின் உட்புறமாக இரத்தப்போக்கு ஏற்படுதல் பிரச்சனை அதிகளவு பூண்டு உட்கொள்ளும் நபர்களில் கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்த இரத்த அழுத்தம் :
ஹைப்பர்டென்க்ஷன் ஏற்படாமல் தடுக்க பூண்டு உதவுகிறது; ஆனால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
தோல் எரிச்சல் :
அதிகளவு பூண்டினை உட்கொள்வதால் சரும தடிப்புகள், சருமம் சிவந்து போதல், சீரற்ற மற்றும் எரிச்சலான சருமம் போன்ற ஒவ்வாமை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
கல்லீரல் கோளாறு :
அதிகப்படியான அளவு பூண்டினை உட்கொள்வது விஷமாக மாறி விடலாம் மற்றும் இந்த விஷத்தன்மையை வெளியேற்ற கல்லீரல் அதிகளவு வேலை செய்ய வேண்டியிருக்கும்; இதனால், கல்லீரல் கோளாறுகள் ஏற்படலாம்.