அறிமுகம் :
சுண்டலில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற சுண்டல் தான். இந்த சுண்டலில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.
இங்கு ப்ரௌன் நிற சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எடையைக் குறைக்கும் :
ப்ரௌன் நிற சுண்டலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும்.

அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
இதய நோய் :

இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.
ஊட்டச்சத்துக்கள் :

ப்ரௌன் நிற சுண்டலில் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள்,கனிமச்சத்துக்கள் ,ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது.
கொலஸ்ட்ரால் குறையும் :

ப்ரௌன் நிற சுண்டலில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற சுண்டலை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த :
ப்ரௌன் நிற சுண்டலில் உள்ள கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.

இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.
செரிமான பிரச்சனைகள் :

தினமும் இரவில் படுக்கும் போது ப்ரௌன் நிற சுண்டலை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
இரும்புச்சத்து :

ப்ரௌன் நிற சுண்டலில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து, உடலில் எனர்ஜியை அதிகரிக்கும்.
மலச்சிக்கல் :

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த சுண்டலை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் :

சுண்டல் வயிறை மிக எளிதில் நிறைவை உணரச்செய்து பசியுணர்வினை கட்டுப்படுத்தப்படும்.வேகவைக்க பட்ட சுண்டலுடன் தண்ணீர் குடிப்பதன மூலம் பசி கட்டுக்குள் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். பழுப்பு நிற சுண்டல் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதுடன் எளிதில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது.