அறிமுகம் :
வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள்.பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.
சரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
சிறுநீரக பிரச்சனைகளுக்கு :-
சிறுநீரக கற்களால் கடுமையான வலியை சந்தித்து வருபவர்களுக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.
சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெந்தியத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
செரிமான பிரச்சனைக்கு :-
வெந்தயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரோடீன், கால்சியம், கனிமம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் அதிகளவு உள்ளது.
எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த வெந்தயத்தை சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல் :-
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இந்த மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.
இதய நோய் :-
வெந்தயத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இதனால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைகின்றது வெந்தயம். அதேபோல் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க பயன்படுகிறது.
உடல் சூடு குறைய :-
உடல் சூட்டினால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும்.
மேலும் உடம்பு சூடு பிடிப்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.
தோல் நோய்கள் :
நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன.
இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.
நீரிழிவு :
கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும்.
ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.
வயிற்று புண்கள் :
ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.
தலைமுடி :
தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும். முடி மென்மையாகும்.
தாய்ப்பால் சுரப்பு :
புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.
இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.
புற்று நோய் தடுப்பு :
வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதி பொருட்கள் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்க வல்லது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிர தன்மை குறையும்.
மாதவிடாய் பிரச்சனைகள் :
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானதே. ஆனால் சில பெண்களுக்கு மட்டும் இது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது.
இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயங்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரை அருந்திவர குணம் கிடைக்கும்.