அறிமுகம்:
பருப்புகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டதாக இருக்கிறது.
இதில் நம் நாட்டு சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாக துவரம் பருப்பு இருக்கிறது.
இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துவரம் பருப்பு பயன்கள்

உடல் எடை கூட :

துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இரத்த அழுத்தம் :

துவரம் பருப்பு இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான வளர்ச்சி :

உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது.
எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
காயங்கள் :

காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
ரத்த சோகை :

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது.
துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
வீக்கம், அழற்சி :

எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது.
துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன.
மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் :

துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
இதய நலம் :

துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது.
பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.
செரிமான சக்தி :

நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது.
உடல் எடை குறைக்க :

உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.