அறிமுகம் :
துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தின் படி இந்த துளசி இலைகளை புனித துளசி என்று அழைக்கின்றனர். இந்த துளசி பெரும்பாலும் தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்க கூடியது. இதைக் கொண்டு பல வீட்டு வைத்தியங்கள் செய்யப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் :
துளசி குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
மன அழுத்தத்தை போக்கும் :
துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும். இது உங்கள் நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது புலன்களை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது.
சலதோஷத்தை சரி செய்கிறது :
துளசியில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது மழைக்கால தொற்றுக்களான சலதோஷம், இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. எனவே இதை கஷாயம் போட்டு குடித்து வரலாம் .
புற்றுநோய் எதிர்ப்பு தன்மை :
துளசியில் வாய்வழி மற்றும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் புற்றுநோய்க்கான மூலக்கூறுகள் இதில் உள்ளன.
எனவே உங்க ஆரோக்கியத்தை பராமரிக்க வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வரலாம். முடிந்தால் துளசி டீ கூட போட்டு குடித்து வரலாம். இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் 5-7 துளசி இலைகளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் அந்த துளசி நீரை குடித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
வாய்துர்நாற்றம் நீங்க :
துளசியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய்துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. எனவே காலையில் எழுந்ததும் துளசி இலைகளை வாயில் போட்டு மென்று வாருங்கள். நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.