அறிமுகம் :
காராமணி என்பது பயறு வகைகளை சேர்ந்தது. இதனை தட்டாம் பயறு என்று அழைப்பார்கள். இது வறண்ட நிலத்திலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இது உடலுக்கு அதிக ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.
ஊட்டச்சத்துக்கள் :
தட்டாம் பயறில் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
காராமணியில் உள்ள கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது.
மேலும் இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு :
காராமணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆகும். மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
புற்றுநோயை தடுக்கிறது :
காராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
செல்களின் பாதிப்பு தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நல்ல தூக்கம் வர :
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தூங்குவதற்கு முன் காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தை தரும்.
தமனிகளில் அடைப்பை தடுக்கிறது :
காராமணியில் உள்ள வைட்டமின் பி1 இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு சேர விடாமல் தடுத்து தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
உடல் எடை குறைய :
கருப்பு நிற கண்களை கொண்ட பயிர்களில் கலோரிகளும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளது.
அதனால் உடல் எடை குறைக்கும் டயட்டில் சிறந்த உணவாக தட்டைப்பயறு இருக்கிறது. தட்டைப்பயிறு நார்ச்சத்து வளமையாக உள்ளதால் உடல் எடை குறைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்தசோகையை தடுக்கிறது :
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும்.இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை வரவிடாமல் தடுக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது :
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
இவ்வகை உணவுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயல்பு விகிதத்தில் வைத்திருக்க உதவும்.
இதயத்திற்கு ஆரோக்கியம் தருகிறது :
கருப்பு கண்களைக் கொண்ட தட்டைப்பயிறு பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் கரையா நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது :
தட்டை பயிர்களில் அதிக அளவிலான நார்ச்சத்தும், புரதமும் அடங்கி உள்ளது. இதனால் உங்கள் வயிற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி செரிமான செயல்முறைக்கு உதவும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு :
தட்டை பயிர்களில் புரதச் சத்து அதிகம் இருப்பதால் சரி செய்யும் செயல் முறையை தூண்டிவிட்டு ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க உதவும். தட்டை பயிர்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இருப்பதால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் நிறைந்து உள்ளன. இதனால் இயக்க உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உள் சரும அணுக்களை தட்டைப்பயிறு காக்கும்.