டீ ட்ரீ ஆயில் :

அழகை அள்ளிதரும் பொருள்களில் எசென்ஷியல் ஆயில்களுக்கும் தனி பங்குண்டு. அதில் முக்கியமானது டீ ட்ரீ ஆயில் என்று சொல்லகூடிய தேயிலை எண்ணெய்.
தேயிலை மற்றும் அதன் தண்டு பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் சருமப் பராமரிப்பிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கியபங்கு வகிக்கிறது. ச.
கூந்தல் வளர்ச்சிக்கு :
கூந்தலுக்கு போஷாக்கு தரும் எண்ணெய் இது. கூந்தலில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்றாலும் அதன் அடர்த்தியை தக்க வைத்துகொள்ளும் வகையில் எப்போதும் இதை பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிப்பதறகு முன்பு 2 டீஸ்பூன் இந்த ஆயிலை எடுத்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதியிலிருந்து கூந்தல் வரை நன்றாக தடவி பத்து நிமிடங்கள் கழித்து கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு கொண்டு குளித்தால் கூந்தலுக்கு கிடைக்க வேண்டிய இயல்பான போஷாக்கு கிடைக்கும். ஆண்கள் பெண்கள் வளரும் பதின்பருவம் அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு :

கூந்தலில் பிசுபிசுப்பு, அரிப்பு, பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அதை பராமரிக்க இந்த ஆயிலையும் பயன்படுத்தலாம். கூந்தல் உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் முதலில் முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் கூந்தல் வளர்ச்சி பாதிக்காமல் இருக்கும்.
பொடுகு அரிப்பு பிரச்சனைக்கு :

கூந்தலில் படியும் அதிகப்படியான அழுக்கு தான் பொடுகு, அரிப்பு பிரச்சனையை கொண்டு வரும். இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் கூந்தலில் அரிப்பு பிரச்சனையை சரிசெய்வதோடு பொடுகை நீக்கி மேலும் பொடுகு அதிகரிக்காமல் தடுக்கிறது. முடியின் வளர்ச்சியை அதிகரித்து தலியின் ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் பிஹெச் அளவையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. பொடுகு, அரிப்பு இருந்தாலே டீ ட்ரீ ஆயிலை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் கூந்தலை அரிப்பு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கலாம்.
பருக்கள் பிரச்சனைக்கு :

முகத்தில் உண்டாகும் பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவற்றுக்கும் கூட இந்த டீ ட்ரீ ஆயில் நல்ல பலன் தரும். சருமத் துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறாமல் அங்கேயே தங்கும் போதுதான் பருக்கள் உருவாகிறது. இந்த அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றினால் பருக்கள்சரும.
சுருக்கங்களுக்கு :

40 வயதுக்கு மேல் முகத்தில் சரும சுருக்கங்கள் வருவது இயல்பானது. ஆனால் தற்போது பலருக்கும் இளவயதிலேயே கொலாஜன் உற்பத்தி விரைவில் குறைகிறது.அதனால் சரும சுருக்கங்கள் உருவாகிறது. இந்த டீ ட்ரீ ஆயில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.