அறிமுகம் :
கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி மாம்பழங்களுக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் கோடைகாலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும்.

பொதுவாக மாம்பழங்கள் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு மாம்பழங்களும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்ளுக்கு?
சரி மாம்பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவ குணத்தை பற்றி இங்கு நாம் காண்போம்.
உடல் சக்திக்கு :

உடலில் சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பழத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சக்தி கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சிக்கு :

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.
சரும பளபளப்புக்கு :

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.
ஹார்மோன்கள் :
நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள் :

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.
இரத்த அழுத்தம் :
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும்.

வளமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
கொலஸ்ட்ரால் :

மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
எடை அதிகரிக்க :

உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம்.மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.
செரிமானம் :

செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.
இரத்த சோகை :
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.
கர்ப்பிணிகள் :
கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம்.

பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.
முகப்பரு :

முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி.
இளமை :
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது.

இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.
புற்றுநோய் :

மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.
மூளை வளர்ச்சி :

மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :

கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி புரிகின்றன.
சர்க்கரை நோய் :

மாம்பழம், சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து. மாம்பழத்தை தவிர அதன் இலைகளும் கூட சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.
கண்களின் ஆரோக்கியம் :

ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.
வெப்ப வாதம் :
பச்சை மாங்காயை சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதனுடன் இனிப்பை சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும்.
மேலும் உடலும் பாதுகாப்புடன் இருக்கும். ஆயுர்வேதத்தின் படி, மத்திய கோட்டிற்குரிய வெப்பநிலையில் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அடிக்கடி சிறுநீர்ப் பெருக்கி ஏற்படவும், அயர்ந்து போகவும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் அதிகப்படியான சூரிய ஆற்றல், உடல் மற்றும் தசைகளை சுட்டெரிப்பதால். இதன் விளைவாக சிறுநீரகத்தில் அதிகமான நச்சுத்தன்மை புகுந்து விடும் என்பதாலேயே தான், மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.