அறிமுகம் :
மரவள்ளிக் கிழங்கு சாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர்.

இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். எனவே, அவற்றின் பயன் பற்றி பார்ப்போம்.
நார்ச்சத்து :

மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
வைட்டமின்கள் நிறைந்தது :

இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.
இரும்புச்சத்து நிறைந்தது :
மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது :
வயதாகும்போது நமது உடலில் உள்ள எலும்புகள் நெகிழ்தன்மை, உறுதி, அடர்த்தி ஆகியவற்றை இழந்து விடுகின்றன. இதனால் ஆஸ்டியோபோரேஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.

மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடல் எடை அதிகரிக்க :

மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.
புற்றுநோயை தடுக்கிறது :

உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.