அறிமுகம் :
மற்ற எந்த ஒரு உணவு சாப்பிட பிடிக்காதவர்களும் இயற்கையில் விளைகின்ற பழங்களை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் உலகின் ஒரு பகுதியில் விளைகின்ற பழங்கள் அப்பகுதி மக்கள் மட்டுமே உண்ணும் நிலையிருந்தது. தற்போது அனைத்து நாடுகளில் உற்பத்தியாகும் பழங்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கின்றன.
அந்த வகையில் மேற்கத்திய நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிட படும் ஒரு பழமான “ஸ்ட்ராபெரி” பழத்தின் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
ஸ்ட்ராபெரி பயன்கள்

வயிறு நலம், செரிமான சக்தி :
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் ஸ்டராபெரி பழத்திற்கு உண்டு.
குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி பழம் பேருதவி புரிகிறது.
தலைமுடி :
ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
கண்பார்வை :
ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஸ்ட்ராபெரி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
ஆண்மை குறைபாடு :
உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.

ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது.
இளமை தோற்றம் :
வயது முதிர்ச்சி அடையும் போது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்றவை ஏற்பட்டு முதுமையான தோற்றம் பெற செய்கிறது.

இவர்கள் ஸ்ட்ராபெரி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.
இதயம் :
நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.

ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்புகள் :
அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அடிக்கடி ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் எலும்புகளில் இருக்கும் காரைகள் மிகவும் வலுவடையச் செய்து, சுலபத்தில் எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
நீரிழிவு :
சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்த்து அதிகம் பழங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நல்லது.

ஸ்ட்ராபெரி பழங்களில் நிறைந்திருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்துகிறது.
உடல் எடை குறைப்பு :
உடல் எடை குறைய ஸ்ட்ராபெரி பழம் உதவுகிறது. ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன.

தினந்தோறும் காலையில் ஸ்ட்ராவ்பெரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.
புற்று நோய் தடுப்பு :
நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் ஸ்ட்ராபெரி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் எதிர்ப்பாற்றல் அவர்களிடம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.