அறிமுகம் :

தாவரத்தின் பழத்தையே நாம் சூரியகாந்தி விதை என்று அழைத்து வருகிறோம். அந்த பழம் வித்தின் அமைப்பை ஒத்து இருப்பதே இதற்கு காரணம். உமி நீக்கப்பட்ட பிறகு கிடைக்கப்படும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். இது ஊட்டச்சத்து நிறைந்த பருப்பாகும். எனவே இவற்றை உட்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக எந்தவொரு உணவுப்பொருட்களையும் உட்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
மெக்னீசியம் சத்துக்கள் :

சூரியகாந்தி விதையில் எண்ணற்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை வேரோடு அளிக்கிறது.
கெட்ட கொழுப்பு கரைய :

சூரியகாந்தி விதைகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையையும், கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை எளிதில் குறைக்கலாம்.
பெண்களுக்கு நல்லது :

சூரியகாந்தி விதையில் உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடிய என்சைம்கள் அதிக அளவில் உள்ளது. இது குறிப்பாக பெண்களின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்தி மாதவிடாய் மற்றும் தைராய்டு போன்ற அறிகுகளை நிர்வகிக்கிறது.மேலும், கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
சூரியகாந்தி விதை சாப்பிடும் முறை :

சூரியகாந்தி விதைகளை பொரித்து சாப்பிடலாம்.காய்கறிகளுடன் வதக்கி சாப்பிடலாம்.பர்கர் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.காலை உணவுகளில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை :

சூரியகாந்தி விதைகளில் உள்ள நொதிகள் செரிமான மண்டலத்தை ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், வயிறு மற்றும் குடல் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி குடல் நோய்கள் வராமலும் தடுக்கிறது.