அறிமுகம் :
சிறுமலைக்கு, திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்று வலதுபுறம் செல்லவேண்டும். உயர்ந்த மலைகளைக் கொண்டது.
கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சிறுமலை :
அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை.
புராணங்களில் கூறப்படும் அனுமன் இமயமலையை கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.
கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி :
இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. செல்லும் வழியில் மலைமாதா கோவில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன.
சிறுமலை வாழைப்பழம் :
இங்கு எப்போதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமலை வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
தமிழ் இலக்கியத்தில் சிறுமலை :
” வாழையும் கமுகும் தாழ்தலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”
மக்கள் விரும்பும் பல முக்கிய இடங்கள்
சிறுமலை நீர்த்தேக்கம் :
2010ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது.
படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.
உயர் கோபுரம் :
சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் இவ்விடம் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம்.
திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.
சஞ்சிவனி மலை :
சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலை. ராமாயனத்தில் ராவணனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது.
அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டிறிய ஐயமுற்று மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது.
கான்டிஜ் எஸ்டேட் :
சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதிலிருந்து 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இப்பகுதியில் 120-132 செ.மீ. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மலையாகப் பொழிகிறது.
மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. காடு ஒழிப்பை தடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதுகாக்கும் அரனாக உள்ளது.
அகஸ்தியர்புரம் :
அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது.
பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது.
வெள்ளிமலை :
அகஸ்தியர்புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர்.
இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.