அறிமுகம் :
நாம் உண்பதற்கு எண்ணற்ற காய்கறிகளும், பழங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பச்சையாகவும், சிலவற்றை ஜூஸ் எனப்படும் சாறு பிழிந்தும் சாப்பிடுகிறோம்.

அப்படி ஜூஸ் போட்டு அருந்தும் ஒரு அற்புதமான மூலிகை புல் தான் அருகம்புல். இந்த அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
நச்சு நீக்கி :
நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது.

அருகம்புல் ஜூஸ் தினந்தோறும் காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அதனை நச்சுக்களும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
நீரிழிவு :
உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.

இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
சிறுநீர் பெருக்கி :

குறைவான நீரை அருந்துபவர்களுக்கும், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றியிருப்பவர்களுக்கும் சிறுநீர் பிரிவதில் பிரச்சனை இருக்கும்.
அருகம்புல் ஜூஸ் அருந்த சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து சிறுநீரை பெருக்கும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் :

இக்குறைபாட்டை போக்க ஒரு நாளைக்கு ஒருமுறை அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.
ரத்த போக்கு :

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கு ஏற்படும். அது போல சிலருக்கு என்ன காரணத்தினாலோ மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இப்படிப்பட்டவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் இக்குறைபாடுகள் நீங்கும்.
பசி உணர்வு :
ஒரு சிலருக்கு எவ்வளவு உணவை உண்டாலும் பசி அடங்காமல் இருக்கும்.மேலும் அதிகமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் அதீத பசியை கட்டுப்படுத்தும்.
எலும்புகள் நலம் :
அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன.

அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.
சுவாச பிரச்சனைகள் :
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர்.

இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தோல் வியாதிகள் :
சுற்றுப்புறங்களில் இருக்கும் நுண்கிருமிகளால் சிலருக்கு தோலில் படை, புண்கள் போன்றவை ஏற்படுகின்றன.

இந்த பாதிப்புகளை கொண்டவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் தோல் சம்பந்தமான வியாதிகள் விரைவில் நீங்கும்.
வாதம் :
மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிலருக்கு முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

அருகம்புல் ஜூஸ் அருந்தி வருபவர்களுக்கு நரம்புகள் வலுப்பெற்று எப்படிப்பட்ட வாத நோய்களும் ஏற்படாமல் காக்கும்.
உடல் எடை :
இன்றிருக்கும் அவசர வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறைகளால் பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.
மூலம் :

மலத்துவாரத்தின் தோலின் ஒரு ஓரத்தில் ஒரு புடைப்பு போல் ஏற்படுவது மூலம் எனப்படும். மூல நோய் பல வகைப்படும். எப்படிப்பட்ட மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அருகம்புல் ஜூஸ் அருந்தி வருவது சிறந்த நிவாரணம் அளிக்கும்.