அறிமுகம் :
நம் முன்னோர்கள் பல அரிய விதைகளை கொண்டு நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தி உள்ளனர். முன்னோர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் குறிப்பாக கிராமங்களில் மருத்துவமனை இல்லாத இடங்களில் எல்லாம் மூலிகை செடிகளையும், விதைகளையும் கொண்டே தீராத வியாதியை குணப்படுத்தியுள்ளனர். இன்றும் கிராமப்புற மக்களின் வீடுகளில் நிறைய மூலிகை மரங்களையும், விதைகளையும் நாம் காணலாம். மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் 95 சதவிகித மூலிகை மற்றும் விதைகளை கொண்டே மருந்துக்கள் தயாரிக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயாளி :
உலகத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை காணலாம்.
சளி, இருமல் :
மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது. சுடுநீரில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதையை கலந்து பருகினால் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் சூடு :
கோடை காலத்தில் மக்கள் உடல் சூடு, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது.
உடல் எடை :
தொப்பையை குறைக்க இது பெருமளவு உதவுகின்றது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறிய சப்ஜா விதையை குடித்து வந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் உடல் எடையும் குறையும்.
அதுமட்டுமின்றி சப்ஜா விதையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வரலாம்.
மஞ்சள் காமாலை :
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் சப்ஜா விதையினை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் பெருமளவு குறையும்.