அறிமுகம் :
ராஸ்பெர்ரி என்பது ரோஜா குடும்பத்தின் ருபஸ் இனத்தைச் சேர்ந்த பல தாவர இனங்களின் உண்ணக்கூடிய பழமாகும். அவற்றில் பெரும்பாலானவை ஐடாயோபாட்டஸ் என்ற துணை இனத்தில் உள்ளன. இந்த பெயர் தாவரங்களுக்கும் பொருந்தும்.
மூளை ஆரோக்கியம் :
ராஸ்பெர்ரி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரியான விகிதத்தில் உள்ளன.
குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் மூளையின் வலிமையை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது.
ராஸ்பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல் பாட்டை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நீரிழிவு மேலாண்மை :
ராஸ்பெரி பழம் பைட்டோ நியூட்ரியண்டுகளின் சிறந்த மூலமாகும். இது சில ஹார் மோன்களுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்துகிறது.
ராஸ்பெரி பழங்களை முழுவதாகவோ அல்லது சாறு பிழிந்து ஜுசாக தொடர்ந்து உட்கொள்வது டைப் -2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
எடை இழப்பு :
இதில் உள்ள நார்ச் சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் கொழுப்பை வேகமாக எரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றொரு காரணம் அதில் அடங்கியுள்ள வைட்டமின் சி ஆகும்.
வைட்டமின் சி உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.