அறிமுகம் :

இனிப்பு சுவையுடைய காயான பூசணிக்காய் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்தது. அதேபோல தான் இதன் விதைகளும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த பூசணி விதையை பெண்கள் ஏன் அடிக்கடி சாப்பிட வேண்டும் .
மருத்துவ குணம் :

பூசணி ஒரு மருத்துவ குணம் கொண்ட தாவரம். அதன் காய் மட்டும் சுவையானதல்ல. அதன் பூ, காய், தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்துக்காகப் பயன்படுகின்றன. இதன் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது வறுத்த பூசணி விதைகளைச் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் .
நீரிழிவு பிரச்சினை :

பொதுவாக நீரிழிவு பிரச்சினையைின் மிக முக்கியக் காரணமே மோசமான உணவுப் பழக்கங்கள் தான். வீட்டில் மற்றவர்கள் சாப்பிட்டு மீந்து போவதை நிறுத்திவிட்டு பெண்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடப் பழக வேண்டும்.குறிப்பாக கர்ப்ப காலத்தில் அதிகம் பேர் நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள் .
உயர் ரத்த அழுத்தம் :

நம்முடைய உடல் குறிப்பிட்ட அளவு மக்னீசியத்தை உற்பத்தி செய்து கொள்ளும். அதேசமயம் அதன் அளவு அதிகரிக்கும் உடல் சில ஆரோக்கியக் குறைபாடுகளைச் சந்திக்கிறது. ஆனால் பூசணி விதையில் உள்ள மக்னீசியம் உடலில் உள்ள மக்னீசியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
சிறுநீர்த் தொற்று :

பூசணி விதையில் உள்ள ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் ஒமேகா கொழுப்பு அமிலங்களும் இதயத்தை மட்டும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில்லை.இது உடல் சூட்டைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீர்ப் பாதைத் தொற்றைச் சரிசெய்ய உதவுகிறது.குறிப்பாக. வெயில் காலத்தில் பூசணி விதையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எலும்புகள் வலிமையாக :

உடலில் கால்சியம் குறைபாடு அதிகமாகும்போது எலும்புகள் பலவீனமாகும். குறிப்பாக, 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாகவே இருக்கும்.பூசணி விதைகளில் உள்ள அமினோ அமிலங்களும் வைட்டமின் சியும் உடலில் கால்சியத்தை அதிகமாக உறிஞ்சப் பயன்படுகிறது.