அறிமுகம் :
உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை.

இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு பயன்கள்
குழந்தைகள் உணவு :
உருளைக்கிழங்கு அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக கருதப்படுகிறது.

எனவே தான் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நார்ச்சத்து :

அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
முக அழகு கூட :
உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது.

முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது.
ஸ்கர்வி நோய் தடுப்பு :

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்துக்கள் அதிகம். இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த அழுத்தம் தீர :
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

அதேநேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
மூளை செயல்பாடுகள் சிறக்க :

உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல் மற்றும் மனச்சோர்வை போக்கி, மூளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.
சிறுநீரக கற்கள் கரைய :

சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள் சரியான அளவில் உருளைக்கிழங்குகளை சாப்பிட்டு வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.
புற்று நோய்களை தடுக்க :
புற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன.

மேலும் சியாசாந்தின் மற்றும் கரோட்டின் சத்துகளும் இருக்கின்றது. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.
உடல் எடை கூட :
உருளைக்கிழங்குகள் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் பெற்றிருக்கின்றன. அதே நேரம் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்களை கொண்டதாக இருக்கின்றன.

இத்தகைய உருளைக்கிழங்குகள் பாலாடைக்கட்டி, வெண்ணை சேர்த்து சமைக்கப்பட்டு உண்ணப்படும் போது மனிதர்கள் குறுகிய காலத்திலேயே உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள்.
இதயம் :

ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.