அறிமுகம் :
வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ பலன்களை இந்த பகுதியில் காண்போம்.
உடல் எடை குறைய :

உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
உடல் எடை அதிகரிக்க :

பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.எலும்புகள் உறுதியாகும்.
வாய் துர்நாற்றம் போக:

வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.
சுறுசுறுப்பாக செயல்பட :

பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.
குணப்படுத்தும் நோய்கள் :

பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கண் பார்வை :

பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும்.
இரத்தம் சுத்தமாக :

பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
கண் சிவத்தல் நீங்க :
இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது.

இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
பொன்னிறமாக மாற :

பொன்னாங்கன்னி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.
வீட்டிலேயே வளர்க்கலாம் :

பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.