அறிமுகம் :
ஆரோக்கிய பட்டியலில் மாதுளை ஜூஸ் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. மாதுளை ஜூஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் தருகிறது.

மாதுளை ஜூஸ் பல நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும்.சமீபத்தில் மாதுளை பழங்கள் குறித்த ஆய்வில் மாதுளை ஜூஸ்ஸில் ஏராளமான ஊட்டசத்துகள் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
நிறைந்துள்ள சத்துக்கள் :
மாதுளம் பழச்சாறில் வைட்டமின் ஏ, தையமின், நியாசின், ஃபோலேட், ரிபோஃபிளாவின், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதில் பல்வேறுபட்ட இயற்கை அமிலங்களான அஸ்கார்ஃபிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபுமரிக் அமிலம், அமினோ அமிலங்களான மெத்தியோனின், புரோலின், வாலின் போன்றவை அடங்கியுள்ளன.
புற்று நோய் தடுக்க மாதுளை ஜூஸ் :
மாதுளை ஜூஸ் பல வகையான புற்று நோய்கள் மற்றும் கட்டிகள், புரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் போன்ற நோய்கள் தடுக்கும் பண்புடையது.

இந்த மாதுளை பழங்கள் புற்று நோய் செல்கள் உற்பத்தியை முடக்கிவிடும்.
இதயத்தை காக்க :
மாதுளை ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும்.
சர்க்கரை நோயை எதிர்க்கும் :
மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர் பழங்களை அதிகம் சாப்பிட பரிதுரைக்கப்படுவதில்லை.

ஆனால் மாதுளை ஜூஸ் குடித்தால் இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, டைப்-2 வகையான சர்க்கரை நோய் அறிகுறிகளை தடுக்கும்.
ஆரோக்கியமான சருமம் :
மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், இளமையுடன் வைத்துக்கொள்ளும், முதுமை செயல்முறையைத் தாமதமாக்கும்.

சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுப்பதோடு புதிய செல்களைப் புதிப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் வராமல் தடுக்கும். மேலும் இது பிம்பிள், பருக்கள், சரும வறட்சிகளை தடுக்கும்.
ஆரோக்கிய தலைமுடிகள் :

மாதுளை ஜூஸ் அதிகம் குடித்து வந்தால் தலைமுடியை ஆரோக்கிமாக வைத்துக்கொள்ளும் மற்றும் அடர்த்தியான தலைமுடி வளர செய்கிறது. தலைமுடியை வலிமையாக்கிறது. தலைமுடி உதிர்வு பிரச்சனைகளை தடுக்கிறது.
வலிமையான பற்கள் :

தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பற்களை வலிமையாக வைத்துக்கொள்ளும். மாதுளையில் உள்ள ஊட்டசத்தால் பற்களில் ப்ளேக் உருவாக்கத்தை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது :
மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறது.

இவற்றில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது.
செரிமானம் சீராக நடைபெற :
மாதுளை பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும்.

மாதுளை ஜூஸ்ஸில் ஒரு நாளைக்கு, உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்க உதவுகிறது.
மாதுளை பழசாற்றின் பக்க விளைவுகள் :
மாதுளை பழசாற்றினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.
இரத்த அழுத்தத்திற்கு மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகள், மாதுளம் பழச்சாறு பருகுவதை தவிர்ப்பது நல்லது.

மாதுளையில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், அதிக அளவு மாதுளம் பழச்சாறை பருகுவது ஹைப்பர்களேமியா எனும் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்; சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மாதுளம் பழச்சாறு சில மருந்துகளுடன் வினை புரிய வாய்ப்புண்டு; கிடைத்துள்ள தகவல் படி, CYP2C9 எனும் மருந்தினை உட்கொள்ளும் நபர்கள் மாதுளையை உட்கொண்டால் பார்மாகோகினெடிக் எனும் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.

பழ விதைகளில் அடங்கியுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடல் சார்ந்த பிரச்சனைகளான அல்சர், பெருங்குடல் புண் போன்றவற்றை குணப்படுத்த உதவுகின்றன.
மாதுளை என்பது ஒரு அமிலத்தன்மை (pH – 3) கொண்ட உணவு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதனை அதிகம் உட்கொண்டால், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை பின்னோக்கி மாறுதல், வாய் மற்றும் வயிற்று பகுதிகளில் அல்சர் அல்லது GERD போன்ற செரிமான நோய்க்குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே மருத்துவரை கலந்தாலோசித்த பின், மாதுளை பழத்தை உட்கொள்வது நல்லது.