அறிமுகம் :
மனிதர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது. இதை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிலக்கடலை தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனர்.
குடல் புற்று நோய் :
புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்கிறது.
மூளை திறன் :
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் வேதிப்பொருட்கள் இருப்பதால் மிக வலுவான ஞாபக சக்தியை கொடுக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயலாற்ற உதவி செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் :
கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தைகளுக்கான உணவு :
வளரும் குழந்தைகளுக்கு உணவில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தீங்கில்லா கொழுப்பு அமிலங்கள் இருப்பது அவசியமாகும். நிலக்கடலையில் மேற்கூறிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிரம்பியிருக்கின்றன. நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. வயதிற்கேற்ற உடல் எடையையும் கொடுக்கிறது.