ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் :

பண்டைய காலம் முதல் ஜாதிக்காய் மற்றும் அதன் எண்ணைய் இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.நரம்பு மண்டலம் மற்றும் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய இது பெரிதும் உதவுகின்றது.மூளையின் செயல்பாட்டை ஊக்கவிக்க இது பயன்படுத்தப்படுகின்றது.

ஜாதிக்காயில் இருக்கும் யூஜினால் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.தசைகளில் ஏற்படும் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்த இது பயன்படுகின்றது.ஜாதிக்காய் கசாயம் மயக்கம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றது.
வலி நிவாரணி :

நீரழிவு நோய், தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் வலிகளை போக்க ஜாதிக்காய் ஒரு நல்லத் தீர்வாக இருக்கின்றது.
நல்ல தூக்கம் :

காலம் காலமாக ஜாதிக்காய் தூக்கமின்மைக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக இருந்து வருகின்றது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய்ப் பொடியை மிதமான சூடுள்ள பாலில் கலந்து தூங்கப் போவதற்கு முன் கலந்து அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.
நல்ல ஜீரணம் ஏற்படும் :
உணவு, உண்ணும் நேரம், வாழ்க்கை முறை என்று பல காரணங்களால், உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகாமல் போவதுண்டு. இதனால் பல பிரச்சனைகள், ஏற்படுவதுண்டு. குறிப்பாக, மல சிக்கல், வயிற்றுப் போக்கு, வாயு என்று பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

ஆனால், ஜாதிக்காயை கசாயம் போல செய்து நீங்கள் அருந்தி வந்தால், உங்கள் வயிற்றில் ஜீரணம் செய்யத் தேவையான சுரபிகளை இது சுரக்க வைத்து, அஜீரணத்தை போக்க உதவுகின்றது.
மூளை ஆரோக்கியம் :

ஜாதிக்காய் மூளையில் இருக்கும் நரம்புகளை ஊக்கப்படுத்த உதவுகின்றது. பண்டை காலம் முதல் இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த பயன் படுத்தப்பட்டு வருகின்றது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கின்றது.
ஆரோக்கியமான சருமம் :

ஜாதிக்காயில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஒவ்வாமையை தடுக்கும் தன்மைகள் இருப்பதால், இது முகத்தில் இருக்கும் கருங்கறைகள், பருக்கல் மற்றும் அடைப்புகளை போக்கி உங்கள் சருமம் ஆரோக்கியம் பெற உதவுகின்றது. ஜாதிக்காய்ப் பொடியை தேனில் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் :

ஜாதிக்காயில் இருக்கும் தாது பொருட்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும். இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் இருப்பதால் உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது.
கொழுப்பை குறைக்க உதவும் :

ஜாதிக்காய் குறிப்பிடத்தக்க அளவு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைக்க உதவுகின்றது. இது பெரும்பாலும் உடல் எடையை குறைக்கவும் பயன் படுத்தப்படுகின்றது.