அறிமுகம் :
நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெயாகும்.
வயிற்று கிருமிகள் :
இனிப்புகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளில் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும்.
புற்று நோய் :
வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.
தலைமுடி :
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் இருக்கின்றன. இவற்றை போக்குவதற்கு வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்க பெறலாம்.
தோல் சுருக்கம் :
வயது அதிகரிக்கும் போது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.