அறிமுகம் :

முருங்கையின் இலை முதல் பூ வரை அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மரத்தின் காய்களிலிருந்து பெறப்படும் இந்த விதைகள் அற்புத மருத்துவ குணங்களை கொண்டவை. புதிய பச்சையான முருங்கை விதைகள் மென்மையாக இருக்கும். ஆனால் அது காய்ந்தவுடன் கடினமாகி பெரிய பீன்ஸ் போல இருக்கும்.முருங்கைக்காய் என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள். இந்திய சமையலில் மட்டுமல்ல பல வித அயல்நாட்டு உணவு வகைகளிலும் இந்த முருங்கைக்காயை பயன்படுத்தி வருகின்றனர்.
புற்றுநோய் எதிர்ப்பு :

புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளுக்கு அறியப்பட்ட தாவர உணவு. இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி யை தடுக்கின்றன. இந்த உயிரணுக்களின் வேகமான வளர்ச்சி தான் இறப்பு எண்ணிக்கையை துரிதப்படுத்துகிறது.
சிவப்பு இரத்த அணு :

சைவ உணவு எடுத்துகொள்பவர்கள் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் உடலில் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை நமது தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு எடுத்து செல்வதில் முருங்கை விதை முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இது இரத்த சோகையை கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஏற்றது.
கால்சியம் :

முருங்கை சத்துக்கள் நிறைந்த தாவரமாகும். இதில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இது பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும்.
தூக்கம் :

முருங்கை விதைகளை 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து தூங்குவதற்கு முன் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் மேம்படும். மறுநாள் பகல் நேரத்தை உங்களை உற்சாகமாக வைத்திருக்க செய்யும்.
மூட்டு வலி :

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.