அறிமுகம் :

சாத்துகுடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது. சரி வாங்க இப்போது சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன பயன்கள், அதுமட்டும் இல்லாமல் குணமாகும் நோய்களை பற்றி தெரிந்துகொள்வோம்..!
தொண்டை புண் குணமாக :
சிலருக்கு சளி, வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதால் தொண்டையில் புண்கள் ஏற்படும்.

இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் தயாரித்த சாத்துக்குடி ஜூஸுடன் ஒரு சிட்டிகை அளவு உப்புவை சேர்த்து தொண்டையில் சிறிதுநேரம் ஜுஸை வைத்து குடித்துவர விரைவில் தொண்டை புண் குணமாகும்.
வாய் துர்நாற்றம் நீங்க :
சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாய் துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் மிகவும் கவலைப்படுவார்கள்.

வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் இந்த வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும்.
புற்றுநோயை தடுக்கும் :
புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம். சாத்துகுடியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ், நோய்களினால் உண்டாகும் புற்றுநோயை வராமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது.

சாத்துகுடியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும்.
இதய நோய் குணமாக :
சாத்துகுடியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.

குறிப்பாக பெருந்தமணி தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வருவதும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் கண்டிப்பாக நீங்கிவிடும். இதய பிரச்சனை இருக்கும் அனைவரும் இந்த சாத்துக்குடி ஜூஸை தினமும் எடுத்து கொண்டால் இதய நோய் விரைவில் குணமாகும்.
இரைப்பை நோய் குணமாக :
இரைப்பை சம்மந்தப்பட்ட நோய்களான அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்சர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.

இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலையாக வைத்து செரிமான பிரச்சனையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது, அதோடு வாய்வு பிரச்சனையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது இந்த சாத்துக்குடி ஜூஸ்.
உடல் எடை குறைய :
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜுஸை குடிக்கலாம். சாத்துகுடியில் கலோரிஸ் மற்றும் கொழுப்பு தன்மை மிகவும் குறைவான தன்மையை பெற்றிருக்கிறது.

அதனால் உடல் எடை அதிகமாய் காணப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜுஸை குடித்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்து காணப்படும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக :
சாத்துகுடியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மற்றும் பைட்டோகெமிக்கல் அடங்கியுள்ளது.
சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை கொண்டது.

சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.