பால் நன்மைகள்
எலும்பு வலிமைக்கு :
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். எனவே தினமும் அன்றாட உணவில் பால் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
நரம்பு மண்டலத்திற்கு :
பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. எனவே தினமும் காலையிலும், இரவிலும் பால் அருந்துவதை பழகிக்கொள்ளவும்.
இரத்த அழுத்தத்திற்கு :
பால் நன்மைகள் பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
தாய்ப்பால் சுரப்பு அதிகமாக்க :
பால் நன்மைகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு கலந்த பால் குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய :
பால் நன்மைகள் வயிற்றில் உள்ள கிருமி அழிய தினமும் பாலில் மஞ்சள் கலந்து நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடல் மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
முகப்பருக்கள் மறைய :
பால் நன்மைகள் உங்கள் முகத்தில் அதிகம் பருக்கள் உள்ளதா அதற்கு கவலைப்பட தேவையில்லை. இதற்கு எளிய முறையாக பூண்டு பாலை முகத்தில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுங்கள், இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள் விரைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.