அறிமுகம் :
உணவில் நாம் அறுசுவைகள் எனும் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு மற்றும் உவர்ப்பு. போன்ற சுவைகளை சமச்சீராக சேர்த்து வர, அவை உடலின் ஆற்றல் நிலையை, சமநிலைப்படுத்துகிறது, இதில் பாதிப்பு ஏற்படும்போது, சுவையை உணரும் நரம்புகள், செயல் இழந்து, உணவில் நாட்டம் குறைந்து, பசியின்மை உண்டாகிறது.
சிறு குழந்தைகளுக்கு அன்னையர் சோறு ஊட்டும்போது, சமயங்களில் குழந்தைகளுக்கு உணவு செரிமானத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, உணவை வெறுப்பர், அந்த சமயங்களில் உணவில் சிறிது மாவடுத் துண்டைக் கலந்து ஊட்டும்போது, குழந்தைகள் உற்சாகத்துடன் உணவை உண்ண ஆரம்பிப்பர். மாவடுவில் உள்ள துவர்ப்பும், புளிப்பும் கலந்த உவர்ப்பு சுவை, குழந்தைகளின் சுவை நரம்பில் ஈர்ப்பை உண்டாக்கி, உணவை மீண்டும் சாப்பிடக் காரணமாகும்.
நாவின் சுவை நரம்பை செயல்பட வைக்கும் :
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது, ஊறுகாயும் அப்படித்தான், உணவில் கடைசியாகத் தான் ஊறுகாய் என்று முன்னோர் கூறியுள்ளனர், உணவின் ஆரம்பத்தில் சுவை மிக்க பதார்த்தங்கள், பின்னர் இறுதியாக மோர் அந்த சமயத்தில் குறைந்த அளவே தொட்டுக்கொள்ள, இலேசான புளிப்பும், துவர்ப்பும், கசப்பும், கார்ப்பும் நிறைந்த கதம்பச் சுவையில், மோர் சாதம் சுவையுடன் உள்ளிறங்கும், எனவே, அளவோடு ஊறுகாயை உணவில் பயன்படுத்த, அதிக நன்மைகள் பெறலாம்.
உடலின் வியாதி எதிர்ப்புத் தன்மை :
பொதுவாக ஊறுகாய்கள், உண்ட உணவை செரிக்க வைப்பதில், சிறப்பானவை. இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, உடலின் வியாதி எதிர்ப்புத் தன்மையை வலுப்படுத்தி, உடலை வியாதிகளிடம் இருந்து பாதுகாப்பவை. இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை சரிப்படுத்தி, உடலில் சர்க்கரை பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், காக்கும் தன்மை உடையவை.
ஊறுகாயின் பயன்கள்:
ஊறுகாயில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் சேரும் நச்சுக்களை அழித்து, வெளியேற்றும் வல்லமை பெற்றவை. ஊறுகாயில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதர்களின் உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் தரும் விதத்தில் அமைந்தவை.
இரத்த சர்க்கரை அளவு :
இரத்த சர்க்கரை அளவை சரிசெய்து, உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகளை, கரைத்து, பித்தத்தைப் போக்கி, உடல் நலனை காக்கும் இயல்புடையவைம கிடாரங்காய் ஊறுகாய்கள். கடைகளில் அதிகம் கிடைக்காத, சில அரிய வகை ஊறுகாய்களை, செய்யும் முறைகளைப் பார்ப்போம்.