மங்கேஷி கோயில் :
மங்கேசி கோயில் கோவாவின் போண்டா வட்டத்தில் உள்ள பிரியோலில் உள்ள மங்கேசி கிராமத்தில் அமைந்துள்ளது. இது மர்தோலில் இருந்து நகுஷிக்கு அருகில் 1 கி.மீ தூரத்திலும், கோவாவின் தலைநகர் பனஜியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும், மட்காவிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது.
காவலே மடத்தின் தலைவராக சிறீமத் சுவாமிகள் என்பவர் மங்கேசியின் மங்கேசி சனஸ்தானின் ஆன்மீகத் தலைவராக உள்ளார்.
இந்த கோயில் கோவாவின் மிகப்பெரிய மற்றும் அடிக்கடி பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில், கோவில் பார்வையாளர்களுக்கு ஆடைக் கட்டுபாட்டை விதித்தது.
வரலாறு :
இந்தக் கோயிலின் தோற்றம் மட்காவில் உள்ள குஷஸ்தாலி கோர்டலிம் என்ற கிராமத்தில் இருந்தது. இது 1543 இல் படையெடுத்த போர்த்துகீசியர்களிடம் விழுந்தது. 1560ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் கிறிஸ்தவ மதமாற்றங்களைத் தொடங்கியபோது, கௌண்டின்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர்களும், வாட்சா கோத்ரத்தைச் சேர்ந்த சாரஸ்வத்துகள் மங்கேசியின் இலிங்கத்தை அசல் தளத்திலிருந்து சுவாரி ஆற்றங்கரைக்கு நகர்த்தினர். இவ்வாறு மாற்றப்பட்ட காலத்திலிருந்து, மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலும், 1890 ஆம் ஆண்டிலும் இந்த கோயில் இரண்டு முறை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதி புதுப்பித்தல் 1973 ஆம் ஆண்டில் கோயிலின் மிக உயரமான கோபுரத்தின் மேல் தங்க கலசம் பொருத்தப்பட்டது. அசல் தளம் மிகவும் எளிமையான கட்டமைப்பாக இருந்தது. தற்போதைய கட்டமைப்பு மராத்தா ஆட்சியில் கட்டப்பட்டது, இது நகர்த்தப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, பேஷ்வாக்கள் 1739ஆம் ஆண்டில் மங்கேசியின் தீவிர பின்பற்றுபவராக இருந்த இராமசந்திர மல்ஹர் சுக்தங்கரின் ஆலோசனையின் பேரில் மங்கேசி கிராமத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர்.
சிறீ மங்கேசியைச் சித்தரிக்கும் வரைபடம் :
பிரதான கோயில் சிவனின் அவதாரமான பகவான் மங்கேசிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மங்கேசியை இங்கு இலிங்கமாக வணங்குகிறார்கள். புராணத்தின் படி, சிவன் தனது மனைவி பார்வதிதியை பயமுறுத்துவதற்காக புலியாக மாறினார். புலியைப் பார்த்து பயந்துபோன பார்வதி, சிவனைத் தேடிச் சென்று, “திராஹி மாம் கிரிஷா!” (ஓ மலைகளின் ஆண்டவரே, என்னைக் காப்பாற்றுங்கள்! ) என்றார். இதைக் கேட்டதும், சிவன் தன்னை இயல்பு வடிவத்திற்குத் திருப்பிக் கொண்டார்.
கோவாவில் கோவில் கொண்ட மங்கீசன் :
சுற்றிலும் இயற்கைக் காட்சிகள், மலைக் குன்றுகள், பச்சைப் பசேலென்று தாவர வகைகள், காடுகள்… ஆகியவை நிறைந்த இடம்… கோவாவில் மங்கேஷி என்ற பெயரால் புகழ் பெற்ற ஒரு ஸ்தலம். இசைக்குயில் திருமதி லதா மங்கேஷ்கர் என்றால் இந்த இடம் ஞாபகம் வருகிறது. 1960இல் போர்ச்சுக்கீசியர் கோவாவை ஆக்கிரமித்துக்கொண்டதில் “குஷஸ்தலை” என்ற இடத்தில் இருந்த புகழ் பெற்ற ஒரு கோயில் நாசமானது. ஆனால், அங்கு இருந்த மக்கள் ஜாக்கிரதையாக அந்தக் கோவிலில் இருந்த சிவ லிங்கத்தை எடுத்து வேறு ஒரு இடத்தில் பத்திரப்படுத்தினார்கள். அங்கு இருந்த ஹிந்து அரசரும் இதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். அந்த இடம்தான் தற்போது மங்கேஷி எனப் பெயர் பெற்றிருக்கிறது.
மங்கீசன் கோவிலின் சிவன் :
இந்தக் கோயிலுக்காகவே, இந்தக் கோவிலின் சிவன் மங்கீசன் சேவைக்காகவே தன் உடல் பொருள் எல்லாம் அர்ப்பித்து வாழ்ந்தவர், ஸ்ரீ சுக்தாங்கர் . முதலில் இருந்த குஷஸ்தலையில் ஆலயம் இருந்த இடத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அந்தப் பரமேஸ்வரன் முதலில் ஒரு தென்னங்கீற்றுக் கொட்டகையில்தான் இருந்தாராம். அதை ஒரு கோயிலாகக் கட்ட போர்த்துக்கீசியர்கள் அனுமதி தரவில்லையாம். விடாது போராடி, இதனால் பல தடவை கிளர்ச்சிகள் வந்து, பின் ஹிந்துக்களின் ஒற்றுமையால் அவர்கள் எதிர்ப்பைக் கை விட்டிருக்கிறார்கள்.
மஹாவிஷ்ணு, லட்சுமி :
மேலும் உள்ளே நுழைந்து கர்ப்பகிரஹம் வருகிறோம். அங்கு மங்கீசன், சிவலிங்க வடிவில் அருள் புரிகிறார். இந்த லிங்கத்திற்கு அருகேயே ருக்மிணி விட்டலர் இருவரின் சிலைகளும் இருக்கின்றன. அதன் அருகில் மஹாவிஷ்ணு, லட்சுமி உருவங்களையும் பார்க்கிறோம். இதனால் இங்கு மக்கள் சைவம், வைஷ்ணவம் இரண்டும் சம பாவனையோடு பூஜித்து வந்தார்கள் எனத் தெரிய வருகிறது.
கோவாவிற்குப் போகும் மக்களில் அங்கிருக்கும் கடலின் அழகையும் நீச்சலுடையில் சுற்றும் இள நங்கைகளையும் கையில் பீர் கோப்பைகளையும் கண்டு ரசித்து ஆனந்தப்படுவது, ஒரு ரகம். ஆன்மீகத் தேடலுடன் ஸ்ரீ மங்கீஷ் ஆலயத்திற்கு வந்து, தன்னை மறந்து “ஒ போலோநாத்” என்றும் ” ஓம் நம்சிவாய” என்றும் கோஷமிடுவது, இன்னொரு ரகம்.