அறிமுகம் :
தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும்தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் இந்த தாமரை விதை பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக்கூடிய ஒரு பொருள். பொதுவாக இது விரதத்தின் போது உட்கொள்ளப்படுகிறது. காலை சிற்றுண்டியாகவும் பிற நட்ஸ்களுடன் சேர்த்து உட்கொள்கிறார்கள்.
ஆரோக்கிய நன்மைகள் :
இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து :
இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.
ஊட்டச்சத்துகள் :
இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது எழும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும். எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்சினை போன்ற நிலைமைகளை சரிசெய்ய உங்கள் உணவில் நீங்கள் இந்த மக்கானாக்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இதயம் சார்ந்த கோளாறுகள் :
அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதால் இது ரத்தத்தின் செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் இதயம் சார்ந்த கோளாறுகள் பெரிதும் ஏற்படுகிறது. தாமரை விதைகள் இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. வறுத்த தாமரை விதைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.