அறிமுகம் :

உடலுக்கு அதிக நன்மை தரும் கீரைகளில் குப்பைக்கீரையும் ஒன்று. இது பெரும்பாலும் தரிசு நிலங்களிலும், குப்பை மேடுகளிலும்தான் வளருகிறது.
குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயர் காரணம் ஏற்பட்டது.
நிறைந்திருக்கும் சத்துக்கள் :

குப்பை கீரையில் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.
குப்பை கீரையின் மருத்துவ பயன்கள்
பசியை தூண்ட :
நன்றாக பசியைத் தூண்டும். குடலை ஆரோக்கியமாக பாதுகாத்து, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.

குப்பைக் கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாகப் பசி எடுக்கும்.
இக்கீரையில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் ஏற்படும் புண்களை வேகமாக குணமாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
உடல் எடை குறைய :

உடலில் தேவையில்லா கெட்டக் கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
இரத்த சோகை தடுக்க :

ரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கும்.
நரம்பு மண்டலம் வலுப்பெற :

கால்சியம் சத்தும், உப்பும் அதிகமாக இருப்பதால் கை, கால் நடுக்கம் குணமாகும், நரம்பு மண்டலமும் வலுபெறும்.
உடல் சூட்டை குறைக்க :

குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.கீரைப்பொரியல் சளி, இருமலை போக்கும். சிறுநீர் நன்கு பிரியும்.
முகப்பரு மறைய :

உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு இருந்தால் அதன் மீது குப்பைக் கீரையை அரைத்து தடவினால் கட்டிகள் கரைந்துவிடும்.
மூட்டுவலிக்கு :

குப்பைக்கீரை, முடக்கறுத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.