அறிமுகம் :
இவ்வுலகில் பலவகையான மூலிகை செடிகள் இருக்கின்றன. அந்த மூலிகை செடிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கரிசலாங்கண்ணி கீரை உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதன் காரணமாகவே இந்த கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை என்றும் சொல்கின்றன.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள் :

நீர் – 85%, மாவுப்பொருள் – 9.2%, புரதம் – 4.4%, கொழுப்பு – 0.8%, கால்சியம் – 62 யூனிட், இரும்புத் தாது – 8.9 யூனிட் மற்றும் பாஸ்பரஸ் – 4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
இரத்த சோகை குணமாக :-

சிலருக்கு கை, கால் மற்றும் பாதங்கள் வீங்கி, கண், முகம் வெளுத்து சிறுநீர் தடையுடன் கடுமையான இரத்த சோகை பிரச்சனை இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சளி குணமாக :-

பொதுவாக குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எனவே கரிசலாங்கண்ணி இலையின் சாறு மற்றும் தேன் இரண்டையும் ஒன்றாக கலந்த சாற்றினை வெந்நீரில் கலந்து குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் சளி இருமல் பிரச்சனை குணமாகும்.
மஞ்சள் காமாலை நோய் குணமாக :-

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கரிசலாங்கண்ணி கீரை உண்பதால் மஞ்சள் காமாலையை தடுக்கலாம்.
இளநரை சரியாக :
இப்போது பலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் இளநரை. இந்த இளநரை பிரச்சனைக்கு கரிசலாங்கண்ணி கீரை சிறந்த சிகிச்சை அளிக்கின்றது.

வேதிப்பொருட்களும் சத்துக்களும் :

இதில் ஸ்டிக்மாஸ்டீரால், வெடிலோலாக்டோன், எக்லிப்டால், டெஸ்மீத்தைல், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளது. தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ இந்த மூன்று சத்துக்களும் இந்த மூலிகையில் அடங்கியுள்ளது.
புண்கள் ஆறுவதற்கு :

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அதில் வரும் சாரை எடுத்து வெட்டு காயம், ஆறாத புண்கள் இவைகளின் மீது தொடர்ந்து தடவி வர காயங்கள் ஆறும். அந்த தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு கிருமி நாசினியாகும்.
சிறுநீர் எரிச்சல் குணமாக:

கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் 30ml சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதனுடன் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இரத்தப்போக்கும் குறையும்.
தேள் கடிக்கு மருந்து :

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தேள் கடித்த இடத்தில் பற்றுப்போட்டால் விஷத்தன்மையை முறியும் வீக்கத்தை குறைக்கும்.