முகவுரை :
வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும். வெண்டி (வெண்டை) மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே (மால்வேசியே) குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும் (தாவரமாகும்). இதன் அறிவியற் பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus esculentus) என்பதாகும். அமெரிக்காவில் இதனை ஓக்ரா என்று அழைக்கின்றனர்.

உயிரியல் வகைப்பாடு :
ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ் (Abelmoschus esculentus) திணை: தாவரம் பிரிவு: மக்னோலியோபைட்டா வகுப்பு: மக்னோலியோப்சிடா வரிசை: மல்வாலெஸ் குடும்பம்: மால்வேசியே பேரினம்: ஆபெல்மொஸ்சஸ் இனம்: எஸ்குலெந்தஸ்
வளர்ச்சி (தோற்றம்) :

இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும். 10 – 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை. 5 – 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 – 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.
ஊட்டச்சத்துக்கள் :
பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டையின் ஊட்டச்சத்துக்களின் விவரம் :
- கலோரிகள் = 25
- ஊட்ட நார்சத்து = 2 கிராம்
- புரதம் = 1.5 கிராம்
- கார்போஹைட்ரேட் = 5.8 கிராம்
- வைட்டமின் A = 460 IU
- வைட்டமின் C = 13 மி.கி
- ஃபோலிக் அமிலம் = 36.5 மை.கி
- சுண்ணாம்புச்சத்து = 50 மி.கி
- இரும்பு = 0.4 மி.கி
- பொட்டாசியம் = 256 மி.கி
- மெக்னீசியம் = 46 மி.கி
பரவல் :

எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியே இத்தாவரத்தின் தாயகம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார் போன்ற பல வெண்டை ரகங்கள் உள்ளன.
வெண்டைக்காய் பயன்கள்

மூளை:
மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும்.
ஞாபகசக்தி :

வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.
புற்று நோய் :

நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி :
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வயிறு ( குடற்புண்) :

இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.
கல்லீரல் பிரச்சனை :

அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.
சிறுநீரகம் பிரச்சனை :
உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.
கொலஸ்ட்ரால் :

உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.
உடல் எடை :

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.