முகவுரை :
நமது நாட்டில் பல வகையானா காய்கறிகள் விளைகின்றன. இவற்றில் ஒரு சில காய்கறிகளை மட்டுமே நாம் அனைவரும் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறோம்.

அதிகம் மக்களால் அதிகம் உண்ணப்படாத ஒரு சில காய்கறி வகைகளில் கொத்தவரங்காய் ஒன்று . இந்த கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கொத்தவரங்காய் பயன்கள்

கர்ப்பிணி பெண்கள் :
கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.
உடல் எடை :
கொத்தவரங்காய் உணவின் அளவை குறிப்பிடும் கலோரி அளவு குறைவாக இருந்தாலும், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக கொண்டிருக்கும் உணவாக இருக்கிறது.

உடல் எடையை வெகு விரைவில் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்தச் சோகை :

ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
நார்ச்சத்து :

கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
நோய் எதிர்ப்பு திறன் :

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
சரும நலம் :
கொத்தவரங்காய் சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன.

அதோடு முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கல் :

கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
பற்கள், எலும்புகள் :

கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கொத்தவரங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
இதய நோய்கள் :
இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும்.

கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது. கொத்தவரங்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
மன அழுத்தம் :
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன.

கொத்தவரங்காயில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கொத்தவரங்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.