முகவுரை :
காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட்ட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் “முட்டைகோஸ்”.

இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும்.முட்டைகோஸை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முட்டைகோஸ் பயன்கள்

மலச்சிக்கல் :
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.

தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
இதயம் :
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முட்டைகோஸ் தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
உடல் எடை குறைப்பு :
கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி முட்டைகோஸ் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
புற்று நோய் :
முட்டைகோஸ் பலவகையான புற்று நோய்களுக்கெதிராக சிறப்பாக செயல்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினந்தோறும் முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.
கண்பார்வை :
நமது முகத்தில் இருக்கும் இரு கண்கள் நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். முட்டைகோஸில் கண்களில் பார்வை சிறப்பாக வைத்திருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

முட்டை கோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.
தோல் நலம் :
நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து பாதுகாப்பது நமது தோல் எனும் சருமம் ஆகும். பல காரணங்களால் சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும்.

சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். முட்டைகோஸ் பக்குவம் செய்து தினமும் அருந்தும் நபர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
தலைமுடி :
நமது உச்சந்தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காப்பது நமது தலைமுடி ஆகும். தலைமுடி நன்றாக இருப்பது நல்ல உடல் நலத்தின் அறிகுறியாகும். சிலருக்கு தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன.

அவற்றை நீக்க தினந்தோறும் அல்லது வாரத்தில் மூன்று முறையாவது முட்டைகோஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மேற்கண்ட தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கலாம்.
ரத்த அழுத்தம்:
மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. 30 வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்றைய காலங்களில் பாதிக்கிறது.

இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.
நீரிழிவு :
மனித உடலில் எப்போதும் நீர் சத்து ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் நீர் சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் முட்டைகோஸ் அதிகம் சாப்பிட்டால் மேற்கூறிய பிரச்சனைகள் சுலபத்தில் தீரும்.
நச்சுகழிவுகள் :
இன்றைய காலங்களில் நாம் சாப்பிடும் எத்தகைய உணவுகளும் ஏதேனும் ஒரு வகையில் நச்சு தன்மை கொண்டதாகவே இருக்கிறது.
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல நச்சுகழிவு பொருட்கள் நமது உள்ளுறுப்புகளில் சேர்ந்து கொள்கின்றன.

வாரத்திற்கு ஒரு மூன்று முறையாவது முட்டைகோஸ் உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலிலுள்ள நச்சுகழிவுகள் நீங்கும்.