அறிமுகம் :
மனிதர்களுக்கு இயற்கை வழங்கிய அற்புத கொடை பழங்கள் ஆகும். உணவு கிடைக்காத அல்லது உணவு உண்ண முடியாத காலங்களிலும் பழங்களை உணவாக கொள்வதால் மிகுந்த நன்மைகள் ஏற்படுத்தும்.

பழங்களில் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடியது திராட்சைபழம் ஆகும். இந்த திராட்சைபழங்களை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
திராட்சை பயன்கள்
வைட்டமின் சக்தி :
திராட்சை பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் கொண்டவையாகும்.

இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள், பற்கள் போன்றவற்றின் உறுதித்தன்மைக்கும், ரத்தக்காயம் ஏற்படும் போது ரத்தம் வேகமாக குறையவும் உதவுகிறது.
மலச்சிக்கல் :
சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது.

மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
கொலஸ்ட்ரால் :
நாம் உண்ணும் சில வகை உணவுகளிலும் மற்றும் எண்ணெய்களிலும் கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் :
திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது.
மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.
கண்கள் :
முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும்.

கண்களின் கருவிழிகளின் செல்வளர்ச்சி தன்மையை திராட்சைபழம் அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண்பார்வை தெளிவாகும். மேலும் கண்புரை, கண்ணழுத்த நோய்களையும் போக்குகிறது.
மன அழுத்தம் :
உடல் மற்றும் சோர்வடையும் பொதும், பதற்றமடையும் போதும் உடல் நலத்தை பாதிக்கும் சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றன.

திராட்சைப்பழங்களில் இந்த தீய ரசாயனத்தை கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனதிற்கு சிறந்த நிவாரணமாக இருந்து, மனஅழுத்தத்தை போக்குகிறது.
நோய் எதிர்ப்பு தன்மை :
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். திராட்சைப்பழங்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன.

இவர்கள் இந்த திராட்சைப்பழங்கள் சிலவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
சத்து உணவு :
திராட்சை பழங்கள் மனிதர்களின் உடலுக்கு பல சத்துக்கள் அளிக்க கூடியதாகும்.

இந்த பழங்களை அப்படியே சாப்பிடுவதாலும், காய வைத்து உலர் திராட்சைகளாக சாப்பிடுவதாலும், ஜூஸ் போட்டு அருந்தினாலும் ஆரோக்கியம் நிறைந்த சிறந்த உணவாக இருக்கிறது.
சிறுநீரகங்கள் :
நமது உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. ஒருவரின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

தினமும் சில திராட்சைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.
ஒற்றை தலைவலி :
தலைவலி அனைவரையுமே மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் ஒரு பாதிப்பாகும். அதிலும் ஒற்றை தலைவலி ஏற்படும் போது தலையில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் இருக்கும்.

இந்த ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும் சமயம் சில திராட்சை பழங்களை நன்கு மென்று சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்.