அறிமுகம் :
திராட்சை பழம் புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த பழமாகும். திராட்சை பழம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் எண்ணற்ற சத்துகளை கொண்டுள்ளது, திராட்சை பழம் ஜூஸ் உடலுக்கு உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பானமாகும்.
திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் திராட்சை பழம் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக பார்போம்….
சத்துக்கள் :
திராட்சை சாறு வைட்டமின் சி, வைட்டமின் ஏ,வைட்டமின் கே நிறைந்துள்ளது. இதில் இரும்பு, கால்சியம்,மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள்,புரதம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி :
திராட்சை ஜுஸ் குடித்து வந்தால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திராட்சையில் உள்ள வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக வைத்து கொள்கிறது.
இதனால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை தடுக்க முடிகிறது.
களைப்பு நீங்கும் :
உடலில் நீர்ச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவு காரணமாக ஏற்படும் உடல் சோர்வை போக்க திராட்சை சிறந்தது.
ஊட்ட சத்துகள் நிறைந்த திராட்சை சாறு ஒரு கிளாஸ் குடித்தால் போதும் உடல் களைப்பு நீங்கி உடனடி சக்தி மற்றும் உற்சாகத்தையும் பெறுவீர்கள்.
மலச்சிக்கல் :
நார்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவது , பாஸ்ட் புட் உணவுகள் , தண்ணீர் குறைவாக குடிப்பது போன்ற காரணமாக மலச்சிக்கல் உண்டாகும்.
திராட்சை சாறு குடிப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்.
கொழுப்பு :
திராட்சை சாறு தமனிகளில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது என்று ஆய்வு காட்டுகிறது.
இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் :
உயர் இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு திராட்சை சாறு பயன் தரும்.காரணம் இதில் உள்ள பொட்டாசியம் ஆகும்.
திராட்சை சாறில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைத் தடுக்கின்றது.
நச்சுக்கள் வெளியேறும் :
திராட்சை சாறு இரத்தக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.
திராட்சை இரத்தத்தின் மிகச் சிறந்த சுத்திகரிப்பாளர் ஆகும். இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சரும பராமரிப்பு :
திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் என்கிற ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. அவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவை தோன்றாமல் தடுக்கிறது, முகப்பொலிவை தருகிறது.