அறிமுகம் :
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு பழம் தான் நெல்லிக்கனியாகும். தமிழ் மொழியில் நெல்லியை நெல்லிக்காய் என்றும் நெல்லிக்கனி என்றும் அழைக்கின்றனர்.
நெல்லிக்கனியை அரைத்து நெல்லிக்கனி சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தலைமுடி பாதுகாப்பு :
மனிதர்களின் தலைமுடி உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயப்படுவது போன்றவற்றில் இருந்து காக்கும் கவசமாக இருக்கிறது. தலை முடிகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
நெல்லிக்காய் ஜூஸ் இயற்கையான பளபளப்பு தன்மையை தலைமுடிக்கு கொடுக்கிறது. பொடுகு பேன் தொல்லை, இள நரை, பித்த நரையை போக்கவும் மற்றும் தலை முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிகளின் வளர்ச்சியை தூண்டவும் பயன்படுகிறது.
உடல் எடை குறைய :
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய ஒரு ஊட்டச் சத்துமிகுந்த பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.உடலில் ஏற்கனவே இருக்கின்ற அதிக கொழுப்புச் சத்துக்களையும் கரைத்து,அவற்றை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி உடல் எடையை குறைக்கிறது.
எலும்புகள் வலிமை பெற :
ஆஸ்டியோகிளாஸ்ட்ஸ் செல்கள் தான் எலும்புகள் வலுவிழந்து போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் அருந்த கொடுத்ததில் அவர்களின் எலும்புகளில் ஏற்படுகின்ற வலி மற்றும் வீக்கம் வெகுவாக குறைந்திருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
கண்பார்வை தெளிவு பெற :
கண்களுக்கு மிக அழுத்தம் தரும் வகையிலான பணிகளை மேற்கொள்வதால் எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது.
மூளை செயல்திறன் :
நெல்லிக்காய் ஜூஸ் நமது இரத்தத்தில் உருவாகும் ப்ரீராடிக்கல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். மூளைக்கு சீரான வேகத்தில் ரத்தம் செல்வதையும் உறுதி செய்கிறது. தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு சிறந்த மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அல்சைமர் போன்ற நோய்கள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றும் ஆபத்தையும் தடுக்கிறது.
சுவாச நோய்கள் தீர :
நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.வைட்டமின் சி சத்து தொற்று கிருமிகளால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் வறட்டு இருமலை வேகமாக குணப்படுத்துகிறது.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி நெஞ்சு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுபவர்கள் தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் வறட்டு இருமல் போன்றவை குறைந்து, சீராக சுவாசிக்க உதவுகிறது.
இதய பாதிப்புகளை தடுக்க :
நெல்லிக்காய் ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் பெக்டின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கொண்டுள்ளது. இவை நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, மேற்கண்ட குறைபாடு ஏற்படாமல் காக்கிறது.
இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீரான அளவில் செல்வதையும் உறுதி செய்கிறது. இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
தோல் சுருக்கம் நீங்க :
சரும நலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸை அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும்.
சரும பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, தோல் சுருக்கங்களை நீக்கி முகத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.
வெண்குஷ்டத்தை தடுக்கிறது :
தோல் செல்கள் மாற்றம் அடைவதால் ஏற்படும் வெண்குஷ்டம் எனப்படும் தோல் வெளுத்தல் குறைபாடு ஏற்படாமல் தடுப்பதில் நெல்லிக்காய் ஜூஸ் சிறப்பாக செயல்படுகிறது.
மலச்சிக்கல்,செரிமான கோளாறுகள்:
அதிக நேரம் கண் விழித்தல், மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.
உடல் அதிக உஷ்ணம் அடைவதை தடுத்து, மலச்சிக்கல் ஏற்படுவதை இந்த ஜூஸ் தடுக்கிறது.
வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்கள் சுரப்பை சரி செய்து, அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதையும் முற்றிலும் தடுக்கிறது. சாப்பிடும் உணவுகள் வேகமாக செரிமானம் ஆவதற்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து பானம் :
நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின் அமினோ அமிலங்கள், தையாமின் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.