நல்லெண்ணெய் நன்மைகள்:

நல்லெண்ணெய் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்:

உணவில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து சமைப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுவோம்..! எள் என்பது உலகில் வெப்ப மண்டலம் அதிகம் உள்ள நாடுகளில் விளைக்கப்படும் ஒரு தானிய வகை யை சேர்ந்ததாகும்.

எள்ளில் இருந்து எடுக்கப்படுகின்றன எண்ணெய் தான் நமக்கு உணவுகளில் சமைப்பதற்கு நல்லெண்ணெயாக கிடைக்கிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நல்லெண்ணெய்யினை சமையலில் உபயோகிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
தோல் சம்பந்த நோய்கள்:

உடலில் தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது நல்லெண்ணெய். நல்லெண்ணெயில் அதிகமாக ஜிங்க் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் தோல் பகுதியில் ஜவ்வு தன்மையை நீடிக்க செய்து சாஃப்டான தோலை உருவாக்கிறது. வெயில் காலங்களில் சிலருக்கு தோல் பகுதியானது வறட்சி அடைந்தது போன்று இருக்கும்.
இதயம் நலத்துடன் இருக்க நல்லெண்ணெய் :

உயிர் நாடியே நமது இதயம் தான். இதயம் எப்போதும் ஆரோக்கியமாக எந்தப் பாதிப்பும் அடையாமல் இருக்க மிகச்சிறந்த உணவு பொருளாக கருதப்படுகிறது நல்லெண்ணெய். நல்லெண்ணையில் செசமோல் மற்றும் செசமின உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. நல்லெண்ணையில் சமைக்கப்பட்ட உணவினை அதிகமாக சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட தசை, நரம்பு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதை தடுத்து நிறுத்தி இதயத்தினை சீராக வைத்திருக்கும்
உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருப்பதற்கு:

நம்முடைய உடல் அனைத்து பகுதியிலும் இரத்த ஓட்டமானது சரியாக சென்றால் மட்டுமே உடலும், மனமும் எப்போதும் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக காட்சியளிக்கும். நல்லெண்ணையில் அதிகமாக செம்பு மற்றும் ஜிங்க் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. நல்லெண்ணையில் இருக்கக்கூடியச் செம்பு சத்தானது உடலில் இரத்த அணுக்கள் அதிகமாக உருவாகுவதற்கு உதவியாக உள்ளது.
புற்றுநோயை தடுக்க நல்லெண்ணெய் :

உடலில் எந்த வகை புற்றுநோய் வந்தாலும் அதனை குணப்படுத்தும் சக்தி நல்லெண்ணைக்கு உள்ளது. நல்லெண்ணையில் போலேட் எனும் சொல்லக்கூடிய கூட்டு வேதிப்பொருளானது அதிகமாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் நல்லெண்ணையில் மெக்னிசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் எண்ண முடியாத அளவிற்கு அடங்கியுள்ளது.
ஆர்த்ரைடிஸ் நோய் முற்றிலும் குணமாக:

உடலுக்கு தேவையான சத்துக்கள் குறையும் போது எலும்பு மற்றும் மூட்டு பகுதிகளில் வீக்கங்கள் மற்றும் வலிகள் ஏற்படுவது வழக்கம். இது போன்ற பிரச்சனையை தவிர்க்க நம் உடலில் போதுமான செம்பு சத்து மிகவும் அவசியம். செம்பு சத்தானது நல்லெண்ணெயில் அதிகளவு உள்ளன. நல்லெண்ணெய்யினால் கொண்டு சமைத்த உணவினை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு உடலில் ஓடும் இரத்தத்தில் அந்த சத்துக்கள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன.
பற்கள் வலுப்பெற நல்லெண்ணெய்:

ஆயில் புல்லிங் எனும் மருத்துவ செயல்முறையை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆயில் புல்லிங் செய்வதற்கு மிகவும் சிறந்த எண்ணெய்யாக நல்லெண்ணெய் விளங்குகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பு ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு நல்லெண்ணெயினை எடுத்து வாய் பகுதியில் ஊற்றி 20 நிமிடம் வரை நன்கு கொப்பளித்து துப்பிய பிறகு பல் துலக்க வேண்டும்.