அறிமுகம் :
பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும்.

பாதாம் பாலில் சாதாரண பாலை விட கால்சியம் மற்றும் புரோட்டீன் குறைவாக இருந்தாலும், ஒரு கப் பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன.
பாதாம்பால் பயன்கள்

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா….?
எடை கட்டுப்பாட்டிற்க்கு :

ஒரு கப் பாதாம் பாலில் 60 கலோரிகள் உள்ளன. ஆகவே,இதைப் பருகினால் உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் இருக்கும். இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.
ஆரோக்கியமான இதயம் :
பாதாம் பாலில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை. ஆகவே இதனை குடித்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
ஆரோக்கியமான மூளை :

பொதுவாக பாதாம் சாப்பிட்டால் ஞாபக சக்தி நல்ல நிலையில் இருக்கும். அதிலும் தினமும் இரவில் படுக்கும் போது, காலையில் எழுந்ததும் பாதாம் பாலை அருந்தினால், அது மூளைக்கு ஆரோக்கியத்தை வழங்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
எலும்புகளுக்கு பலம் :
பாதாம் பாலானது நமது தினசரி கால்சியத் தேவையில் 30 சதவீதத்தையும், வைட்டமின் டி தேவையில் 25 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது.

மேற்கூறிய இரண்டும் ஒன்றாகச் செயல்பட்டு எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமையைச் சேர்க்கிறது. இதனால் கீல்வாதம், ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்களும் தடை செய்யப்படுகின்றன.
வலிமையான தசைகள் :

பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் போன்ற தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கிறது.
சருமப் பாதுகாப்பு :
பாதாம் பாலில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் இ ஆகியவை சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கின்றது.

இதனைக் கொண்டு சருமத்தை அலசும்போது சருமம் பளபளப்பாகிறது. பளபளப்பான ஆரோக்கியமான பன்னீர் மற்றும் பாதாம் பாலிலைக் கொண்டு சருமத்தை அலச வேண்டும்.
சிறுநீரக ஆரோக்கியம் :
கால்சியம் மற்றும் பொட்டாசியம் தனிமங்களின் அளவுகள் உடலில் அதிகரிக்கும்போது அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்குகின்றன.

பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளது.
எனவே கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பாதிப்பு :

பாதாம் பாலை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது தைராய்டு சுரப்பில் பாதிப்பினை உண்டாக்குகிறது.
யாருக்குக் கொடுக்கக்கூடாது :

இரண்டு வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு இப்பாலினைக் கொடுக்கக் கூடாது.