அறிமுகம் :
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன.
இத்தகைய சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். பீட்ரூட்டை சாப்பிட்டால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள் :
பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
இனிப்புச் சுவையுடைய சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். இதன் சுவையானது கேரட்டைப் போன்றே இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
அழுக்குகளை வெளியேற்ற :
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக்க உதவும்.
மூல நோய் குணமாக :
பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், மூல நோய் குணமாக உதவும்.
புற்றுநோயை கட்டுபடுத்தும் :
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் :
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
செரிமான பிரச்சனை நீங்க :
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்னை நீங்கும்.
அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க :
பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
முகப்பொலிவிற்கு :
பீட்ரூட் முகப்பொழிவை அதிகரிக்கும். உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றிற்கும் சிறந்த அழகுப் பராமரிப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு :
பீட்ரூட்டில் உள்ள இலைகள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். எலும்பை வலுவடைய செய்யும்.