கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். உருசியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.

கோவா மாநிலம், அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள், மற்றும் கோவில்களால் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம், பாம் இயேசு தேவாலயம் ஆகும்.இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியகம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகள் :
வட கோவா கடற்கரைகள்

- கலங்குட் கடற்கரை
- கண்டோலிம் கடற்கரை
- பாகா கடற்கரை
பணாஜி கடற்கரைகள்
- மிராமர் கடற்கரை
- டோனா பவுலா கடற்கரை
தெற்கு கோவா கடற்கரைகள்

- கோல்வா கடற்கரை
- பலோலம் கடற்கரை
கோவில்கள்

- மங்கேஷி கோயில்
- சாந்த துர்கா கோவில்
- மகாதேவ் கோவில்
- சந்திரேஸ்வரர் பூத்நாத் கோவில்
- பிரம்மா கோவில்
- மஹாலச நாராயணி கோயில்
- மகாலட்சுமி கோவில்
- சப்தகோடேஷ்வர் கோவில்
- காமக்ஷி கோயில்
தேவாலயம்

- போம் இயேசுவின் பசிலிக்கா
- செயின்ட் கேத்தரின் தேவாலயம்
- ஜெபமாலை தேவாலயம்
- செயின்ட் கஜெட்டன் தேவாலயம்
- அலெக்ஸ் சர்ச்
- மூன்று கிங்ஸ் சேப்பல்
- கிளாரா தேவாலயம்
- டியோகோ சர்ச்
- அதிசயங்களின் சிலுவை தேவாலயம்
- எலிசபெத் சர்ச்
கோவாவில் பார்க்க வேண்டிய இடங்கள்

- கிராண்டே தீவு (ஸ்கூபா டைவிங்கிற்கு)
- போக்மாலோ கடற்கரை (ஸ்நோர்கெலிங்கிற்கு)
- பாலோலம் கடற்கரை (கயாக்கிங்கிற்கு)
- கலங்குட் கடற்கரை (பாராசைலிங்கிற்கு)
- மோர்ஜிம் கடற்கரை (காத்தாடி உலாவலுக்கு)

6. மோபர் பீச் (முழங்கால் போர்டிங்)
7. கண்டோலிம் கடற்கரை (வேக்போர்டிங்கிற்கு)
8. கோல்வா பீச் (ஜெட் ஸ்கீயிங்கிற்கு)
9. பாகா கடற்கரை (வாழைப்பழ படகு சவாரிக்கு)
10. சின்குவேரிம் கடற்கரை (டால்பின் சஃபாரிக்கு)

11. ஆர்போரா சனிக்கிழமை இரவு சந்தை
12. மேக்கியின் சனிக்கிழமை இரவு பஜார்
13. அஞ்சுனா பீச் பிளே மார்க்கெட்
14. பிரிட்டோவின் ஷேக்
15. கஃபே டெல் மார்

16. சுருட்டை
17. ஜான்சி
18. சௌசா லோபோ
19. டிட்டோவின்
20.சோரோ – தி வில்லேஜ் பப்

21. கஃபே மோஜோ பப் மற்றும் பிஸ்ட்ரோ
22. சிறுத்தை பள்ளத்தாக்கு
23. கவாலா
24. டெல்டின் ராயல்
25. டெல்டின் ஜாக்

26. கேசினோ பிரைட்
27. கேசினோ பாம்ஸ்
28. துத்சாகர் நீர்வீழ்ச்சிகள்
29. மொல்லம் தேசிய பூங்கா
30. நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம்