முகவுரை :
இஞ்சி என்பது ஒரு வகையான மூலிகையாகும்.இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. சில சமயங்களில், இஞ்சி ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இன்றையக் கட்டுரையில், இஞ்சியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
நிறைந்துள்ள தாதுக்கள் :
இஞ்சி மனித உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு மூலிகையாக அறியப்படுகிறது. இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன.
இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன, இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இஞ்சிக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அவற்றில் சில கீழே……
செரிமானத்தை மேம்படுத்துகிறது :
வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பைப் பிரச்சினைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்திலும், இது நன்மை பயக்கிறது.
குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது :
குடல் அசைவுகள் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ பண்புகள், இஞ்சியில் நிறைந்துள்ளன.
இஞ்சியில் உள்ள வைட்டமின் பி 6 வெளியேற்ற அமைப்புக்கு பயனுள்ளதாக அமைகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.
கீல்வாதத்தைத் தடுக்கிறது :
கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், இஞ்சியை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது.
இருமலைக் குறைக்கிறது :
இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணியாகும். இது தொண்டை வலியை நீக்குகிறது. மேலும், இருமலையும் குறைக்கிறது.
இதயத்தை பராமரிக்கிறது :
இஞ்சி கொழுப்பின் அளவை பராமரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
இதன் விளைவாக, இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முடிகிறது. இஞ்சியில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது :
இஞ்சி உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது :
ஒற்றைத் தலைவலியைக் குறைக்க இஞ்சி தேநீர் மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், ஊட்டச்சத்து கூறுகளும் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
சளியைத் தடுக்கிறது :
இஞ்சியில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகளின் காரணமாக, இது ஐலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கிறது.
மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துகிறது :
பெண்களின் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள், இந்த வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது :
புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். இஞ்சி புற்றுநோய் செல்களை நீக்கி புற்றுநோயைத் தடுக்கிறது.
இஞ்சியின் பக்க விளைவுகள் :
ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு நாக்கில் வீக்கம், உடலில் அரிப்பு போன்ற சிக்கல்களை இஞ்சி ஏற்படுத்துகிறது. அத்தகையவர்கள் இஞ்சி உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
இஞ்சி தேநீரை 5 கோப்பைக்கு மேல் உட்கொள்ளும் போது, ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மையை ஆகியவை ஏற்படுகின்றன.
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.