அறிமுகம் :

அன்றாடம் நாம் சமைக்கின்ற உணவில் தவிர்க்கவே முடியாத ஒரு உணவு பொருளாக கொத்தமல்லி கீரை இருக்கிறது .
இந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி நன்மைகள்

வயிறு பிரச்சனைகள் :
நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது.

உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.
சரும நோய்கள் :
கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.

தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு நல்ல நிவாரணி.
கர்ப்பிணி பெண்கள் :
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.
அம்மை நோய் :
கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. எனவே அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.
மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் :

ஒரு சிலருக்கு காரணமின்றி அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இதற்கு புதிய கொத்தமல்லி இலைகளின் சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட மூக்கில் வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். சில சமயங்களில் இதை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நின்றுவிடும்.
வாய்ப்புண் :
காரமான உணவுகளை சாப்பிடுவது, வாய் மற்றும் பற்களை சுகாதாரமாக வைத்து கொள்ளாதது போன்ற காரணங்களால் சிலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

கொத்தமல்லி இலையில் சிட்ரோநெல்லோல் எனப்படும் சிறப்பான கிருமிநாசினித் வேதிப்பொருள் உள்ளது. வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் அடிக்கடி கொத்தமால்லி இலைகளை சாப்பிட்டு வருவது நல்லது.
கொழுப்பு :
சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.
கல்லீரல் :

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.
மாரடைப்பு :
இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.

கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது.
எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.
கண் சம்பந்தமான பிரச்சனைகள் :
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.