முகவுரை :
கிழங்கு வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம்.
நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.
வைட்டமின் பி6 :
இதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் பி6 ஆகும். வைட்டமின் பி6 நம் உடலில் உற்பத்தியாகும் ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும்.
இந்த ஹோமோசயட்டின் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கு இதனை உடலைவிட்டு எளிதில் வெளியேற்றிவிடும்.
வைட்டமின் சி :
வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது.
காயங்களை விரைவில் குணமாக்குவது சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்கவைப்பது என பலவற்றிற்கும் வைட்டமின் சி அவசியம்.
எலும்புகளின் ஆரோக்கியம் :
சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் அவசியமானது.
இரும்புசத்து :
நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க இரும்புசத்து அவசியம் என்று நாம் அறிவோம்.
ஆனால் அதுமட்டுமின்றி இரத்த உற்பத்தி, மனஅழுத்தத்தை குறைத்தல், நோயெதிர்ப்பு மணடலம் சரிவர செயல்பட, உடலியக்கங்கள் சரியாக இருக்க என அனைத்திற்கும் இரும்புசத்து அவசியம். இரும்புசத்து சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமாக உள்ளது.
மெக்னீசியம் :
சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரிபண்ண சிறந்த மருந்தாக இருக்கிறது.
மருத்துவர்களின் அறிக்கை படி நான்கில் ஒருவருக்கு மெக்னீசிய குறைபாடு உள்ளது. இதனால் இரத்த சுழற்சியில் மாற்றம், இதை அடைப்பு, வலுவில்லாத எலும்புகள் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதனை சரிசெய்ய சர்க்கரை வள்ளி கிழங்கு சரியான தேர்வாக இருக்கும்.
பொட்டாசியம் :
நமது சிறுநீரகம் சரியாக செயல்பட அவசியமான ஒன்று பொட்டாசியம். மேலும் இதய துடிப்பு சீராக இருக்கவும், நரம்பு மண்டலம் சரியாக செயல்படவும் பொட்டாசியம் அவசியமானது.
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமுள்ள இது தசைப்பிடிப்புகளை சரிசெய்தல், வீக்கத்தை குறைத்தல் போன்ற பல பிரச்சினைகளை சரிசெய்ய கூடியது.
சர்க்கரையை குறைத்தல் :
இதன் பேரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர இது எந்த விதத்திலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இயற்கையாகவே இதிலுள்ள சர்க்கரை மிகவும் மெதுவாகவே இரத்தத்தில் கரையும். இதனால் இதனை கரைப்பது மிகவும் எளிது.
அதுமட்டுமின்றி சோர்வு மற்றும் எடை அதிகரிப்பிற்கு இதனை பயன்படுத்தலாம்.
புற்றுநோய் :
இதன் நிறமே உணர்த்தும் இதிலுள்ள கரோட்டீன்களை பற்றி. இதிலுள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
பீட்டா கரோட்டின் உங்கள் விழித்திரையை பாதுகாப்பதுடன் உங்கள் குணமாகும் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதுடன் வயதான தோற்றத்தையும் குறைக்கும்.
குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.