முடி உதிர்வு :
தலைமுடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய கவலையாக இருந்து வருகிறது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் சங்கடப்பட்டு வருகிறோம். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஏராளம் விற்பனைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் மாதக் கணக்கில் பயன்படுத்தினாலும் கூட நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை.
காரணம் :
தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் சரியான சத்துள்ள உணவை நாம் எடுத்துக் கொள்ளாதது தான். சரிவிகித உணவு எடுத்துக் கொண்டால் தலை முடி உதிர்வது நிற்கும். ஆனால் இன்றைய சூழலில் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதற்கு யாருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது.
எந்த எண்ணையை நாம் வாங்கி தடவினாலும், முடி உதிர்வது அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை என்கிற புலம்பல் தான் நம்மிடம் இருக்கிறது. செயற்கையாக கிடைக்கும் இந்த எண்ணெய்களை விட, இயற்கையாக வீட்டிலேயே சில எண்ணெய்களை தயாரித்து நாம் உபயோகித்து வரலாம். அப்படி இருந்தாலும் கூட உங்களால் இதற்கான முழு தீர்வை கொடுக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு மிக முக்கிய காரணம், உங்கள் உடலில் போஷாக்கு குறைபாடு இருப்பதே ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் தலைமுடி உதிர்வது தொடர்ந்து நடைபெறுகிறது.
தீர்வு :
இதற்கு சிறந்த தீர்வை கறிவேப்பிலை, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி போன்ற இயற்கை பொருட்கள் கொடுக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெயில் தலைமுடியின் வேர்களை மசாஜ் செய்து வந்தால் போதிய போஷாக்கு கிடைக்கும். கறிவேப்பிலையை நீங்கள் எந்த அளவிற்கு உணவாக உள்ளுக்குள் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு தலைமுடி உதிர்வது கட்டுப்படும். முடி வேகமாக வளர உதவும். நாம் முடிக்காக வெளியில் செய்யும் விஷயங்களை விட, உடம்புக்கு உள்ளே கொடுக்கப்படும் சத்துக்கள் அதிகமாக வேலை செய்யும் என்பது தான் உண்மை.
உங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை சட்னி, கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை சாதம் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். கண்பார்வை சீராகும். கறிவேப்பிலையை இந்த முறையில் நீங்கள் ஜூஸ் செய்து குடித்தால் குடிப்பதற்கு நன்றாகவும் இருக்கும். அதே போல் பத்தே நாட்களில் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி வேகமாக வளர உதவும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதை பச்சையாக ஜூஸ் செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கும், கூந்தலுக்கும் சிறப்பான வளர்ச்சியை தரும். கண்பார்வை கோளாறு, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், ரத்தசோகை போன்றவற்றையும் குணப்படுத்தும்.
கறிவேப்பிலை சாரு :
- ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீரில் நன்கு அலசி விட்டு மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.
- அதனுடன் கால் டீஸ்பூன் – சீரகம், 3 டீஸ்பூன் – தயிர் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- அரைத்த விழுதுடன், தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். குடிப்பதற்கு கசப்பு தன்மை இல்லாமல் நல்ல சுவையுடன் இருக்கும்.
- உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்யும்.
உடலில் இருக்கும் தேவையில்லாத சளி தேக்கத்தை கரைத்துவிடும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தம் செய்யும். தலைப்பகுதியின் மண்டை ஓட்டில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டும். பத்து நாட்கள் மட்டும் தொடர்ந்து குடித்து பாருங்கள். மோசமான தலைமுடி உதிர்வு கூட சட்டென கட்டுப்பட்டு உதிர்வது குறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.